crazy Jokes : தனது நாடங்கள், வசனங்கள் மூலம் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த கிரேசி மோகன் இப்போது இல்லை என்றாலும், அவர் நாடகம் பார்த்துவிட்டு அவர் குறித்து உலகநாயகன் பேசிய பேச்சுக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.கிரேசி மோகனின் நாடகத்தை கண்டு களித்த பின்னர், கே.பாலச்சந்தர், கமல்ஹாசன், கு.ஞான சம்பந்தம் ஐயா ஆகியோர் பேசிய மேடை பேச்சில் கமல்ஹாசன், பாருங்க.. இப்படி ஒரு அடி அப்படி ஒரு அடி கொடுக்கறாங்க என்று கூறினார்.
நமீதா, கெளதமி, மதுவந்தி, குட்டி பத்மினிக்கு பாஜக-வில் புதிய பதவி!
அதாவது கிரேசி மோகன் கடந்த 32 வருடங்களுக்கும் மேலாக சபரி மலையில் மகர ஜோதி ஏத்துவது மாதிரி விடாம நாடகம் போட்டுக்கிட்டு இருக்கார்னு சொன்னார். அப்போது, அச்சா கமல்ஹாசன் புத்தியை காட்டிட்டார்னு நினைச்சுக்காதீங்க.. இது ஒரு உதாரணம்தான்னு சொல்ல, ரசிகர்கள் உடனே நாத்திகம் பேசும் நல்லவர் என்று கத்தினார்கள். அடுத்து ஆழ்வார் பேட்டை ஆண்டவர் என்றும் கத்தினார்கள். இதைத்தான் கமல்ஹாசன் பாருங்க இரண்டையும் சொல்லி, இப்படி ஒரு அடி, அப்படி ஒரு அடி என்று தனது இரு கன்னத்தையும் காண்பித்து கூறினார்.
பாமாவிஜயம் படத்தின் மேல் இன்னும் கோபம் இருக்கிறது என்று கூறினார் கமல்ஹாசன். அதாவது, இயக்குநர் பாலச்சந்தர் மன்மத லீலை படத்தை ஷூட் செய்த நேரம்... ஒரு காட்சி சரியாக வரவேண்டும் என்று, அப்படி இப்படி நடக்க சொல்லி பதட்டமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருப்பார். அப்புறம் சே..பாமாவிஜயம் நாகேஷை நினைவில் வச்சு இந்த காட்சியை எழுதிட்டேன்னு சொல்வார். எனக்கு என்னடான்னு ஆயிரும்.. பிறகு நாகேஷ் சாரை சந்திக்கும்போது, சார் இப்படி அடிக்கடி சொல்றார்.. என்ன செய்தீங்க சார் என்று கேட்டால், அதெல்லாம் சரியாகிரும்னு சொல்வார். சரியாச்சு.. ஒரு 35 வருஷத்துக்கு பிறகு.. எப்படின்னா.. அதுக்குப் பிறகு வந்தவங்களை உதாரணம் காட்டி, அடுத்து வந்த சில பேரை சொல்லி காண்பிக்கிறார். இப்போ அவங்க எல்லாம் தலையணை வச்சுக்கிட்டு திரியறாங்கன்னு சொன்னார் கமல்.
கிரேசி மோகன் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்றுவரை ஒரே குழுவினருடன்தான் பயணித்து வருகிறார். மேக்கப் மேன் கூட மாத்தலை...அவர் கை நடுங்கினாலும், இவங்க அவர் முன் முகத்தை காண்பித்து மேக்கப் போட்டுக்கற வரைக்கும் அப்படித்தான் இருப்பார்கள் என்று பாராட்டி பேசினார் கமல்ஹாசன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil