scorecardresearch

மும்மதமும் சம்மதம்: ரஜினி வீட்டில் ஆன்மீக படங்களை கவனிச்சீங்களா?

ரஜினிகாந்த் வருண் வெங்கடேஷ் மூவரும் இருக்கும் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் அலமாரியில் பல புகைப்படங்கள் உள்ளது.

Rajinikanth
ரஜினிகாந்த் – வருண் சக்ரவர்த்தி – வெங்கடேஷ் அய்யர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தை கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் அய்யர் சந்தித்த புகைப்படம் இணயைத்தில் வைரலான நிலையில், தற்போது இந்த புகைப்படம் குறித்த தகவல் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றுமு் லால் சலாம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் அடுத்து ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள் ஜெயிலர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் அய்யர் இருவரும் சந்தித்து பேசினர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி வெங்கடேஷ் அய்யர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற நிலையில், போட்டி முடிந்ததும் வருண் சக்ரவர்த்தி – வெங்கடேஷ் அய்யர் இருவரும் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவத்துக்கொண்ட நிலையில், கிரிக்கெட குறித்து அவரிடம் தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

இதனிடையே ரஜினிகாந்த் வருண் வெங்கடேஷ் மூவரும் இருக்கும் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் அலமாரியில் பல புகைப்படங்கள் உள்ளது. இதில் முதலில், ராகவேந்திரா சுவாமிகள் புகைப்படம் உள்ளது. அதற்கடுத்து ஏசு, மெக்கா, ஆகிய புகைப்படங்கள் உள்ளது. முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனக்கு மும்மதமும் ஒன்றுதான் என்பதை சொல்லும் வகையில் தனது வீட்டில் இந்த புகைப்படங்களை வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cricketers varun and venkatesh meet rajinikanth photos viral

Best of Express