OTT Release: க்ரைம் த்ரில்லர் முதல் ரொமான்ஸ் வரை: நீங்க மிஸ் பண்ணக்கூடாத இந்த வார ஒ.டி.டி ரிலீஸ்!

ஒ.டி.டி தளங்களில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ஒ.டி.டி தளங்களில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
OTT rela today

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை போல் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அடுத்து வெளியாக உள்ள முக்கிய வெளிநாட்டு திரைப்படம் மற்றும் வெப் தொடர்களை பார்ப்போம்.

ஏ கம்ப்ளீட் அன்நோன் (A Complete Unknown)

Advertisment

19-வயது இசை கலைஞர் பாப் டிலான் என்பவரின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள பயோகிராபி திரைப்படம் ஏ கம்ப்ளீட் அன்நோன் (A Complete Unknown). இப்படம் வரும் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

அண்ட் ஜெஸ்ட் லைக் தட்(And Just Like That)

பெண்கள் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்ட காமெடி, ரொமான்டிக் வெப் தொடர் அண்ட் ஜெஸ்ட் லைக் தட்(And Just Like That). ஏற்கனவே வெளியான இத்தொடரின் இரண்டு சீசன்களும் ஒடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இத்தொடரின் மூன்றாவது சீசன் இன்று 29ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

க்ரிமினர் ஜெஸ்டிஸ்: ஏ ஃபேமிலி மேட்டர் (Criminal Justice: A Family Matter)

Advertisment
Advertisements

தரமான க்ரைம் வெப் தொடர் பார்க்க வேண்டும் என்று விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு தரமான வெப் தொடர் தான் க்ரிமினர் ஜெஸ்டிஸ்: ஏ ஃபேமிலி மேட்டர் (Criminal Justice: A Family Matter).  ஒரு செவிலியர் மர்மமான முறையில் இறந்துகிடக்க, அவரின் இறப்பு கொலையா? என்ன நடந்தது என்பதன் குறித்து நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. அதன்பிறகு என்ன நடந்துது என்பது தான் இந்த தொடரின் கதை. இன்று 29ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

கேப்டன் அமெரிக்க: ப்ரேவ் நியூ வோல்ட் (Captain America: Brave New World)

மார்வல் பிரியர்களுக்கு இந்த வாரம் செம ட்ரீட் என்றே சொல்லலாம். கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியான மார்வல் திரைப்படம் கேப்டன் அமெரிக்க: ப்ரேவ் நியூ வோல்ட் (Captain America: Brave New World). அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன், ஃபேண்டஸி கதைக்களத்தில் வெளியான இப்படம் நேற்று 28ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: