scorecardresearch

கேள்விபட்ருக்கியா…. ஆட்டநாயகன்… வாரிசு வசனத்தில் தல தோனி… வைரல் வீடியோ

சென்னை அணி விளையாடிய அனைத்து சீசன்களிலும் கேப்டனாக களமிறங்கியுள்ள தோனி, 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கேள்விபட்ருக்கியா…. ஆட்டநாயகன்… வாரிசு வசனத்தில் தல தோனி… வைரல் வீடியோ

சமீபத்தில் வெளியான விஜயின் வாரிசு பட டிரெய்லர் வசனங்களை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டன்களில் முக்கியமானவர் தோனி. இந்திய அணிக்காக ஐசிசி நடத்தும் 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வென்று காட்டிய தோனி மிஸ்டர் கூல் கேப்டன் என்று பெயரெடுத்துள்ளார். தற்போது 41 வயதாகும் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

மேலும் சென்னை அணி விளையாடிய அனைத்து சீசன்களிலும் கேப்டனாக களமிறங்கியுள்ள தோனி, 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 9 முறை ப்ளே அப் சுற்றுக்கு அணியை அழைத்துச் சென்றுள்ளார். முன்னணி இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றிருந்தாலும், அணியின் நிரந்தர கேப்டன் தோனி மட்டும் தான்.

சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற அணி ரசிகர்களும் ரசிக்கக்கூடிய வீரராக திகழும் தோனிக்கு தமிழகத்தில் தீவிர ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் ஐபிஎல் தொடங்கும்போதும், அவர் பிறந்த நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் தோனியில் வீடியோவை மாஸாக உருவாகி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான வாரிசு பட டிரெய்லரில் வரும் வசனங்களை பயன்படுத்தி தோனியின் வீடியோ பதிவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியே தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தோனியின் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Csk captain dhoni viral video with vijay varisu dialogue