சென்னையில் தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisment
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பவுலின் ஜெசிகா. இவர் தீபா என்ற கேரக்டரில் வாய்தா என்ற படத்தில் நடிகையாக நடித்திருந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நெற்குன்றத்தில் தான் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு காதல் தோல்விதான் காரணம் எனக் கூறப்பட்டது. 29 வயதான பவுலின் ஜெசிகா, டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களில் தோன்றி பிரபலமானார்.
நடிகை பவுலின் ஜெசிகா
Advertisment
Advertisements
இந்த நிலையில் இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரது மரணம் தொடர்பாக கோயம்பேடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்டமாக பவுலின் ஜெசிகா மரணத்துக்கு காதல் தோல்விதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த வழக்கில் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பவுலின் ஜெசிகா வழக்கு மீண்டும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், அவரது செல்போனிலும் சில முக்கிய தகவல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
(தற்கொலை தீர்வல்ல: அழையுங்கள் 104)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil