எனக்கு பெண் குழந்தை இருக்கு, ஷபானா மேல கை வச்சா தப்பா பேசுறாங்க; அவருக்கு கல்யாணம் ஆனது தெரியாதா? புகழ் ஓபன் டாக்!

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குக் வித் கோமாளி புகழ் பதில் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குக் வித் கோமாளி புகழ் பதில் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pugazh

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கோமாளியாகப் பணியாற்றி மக்களின் அன்பைப் பெற்ற புகழ், தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா அனுபவங்கள், விமர்சனங்களுக்கான பதில்கள், மற்றும் சமூகப் பணிகள் பற்றி எஸ்.எஸ் மியூசிக் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில் மனம் திறந்து பேசினார். இதில்அவரது சினிமா பயணம், எதிர்கொண்ட சவால்கள், மற்றும் அவரது மனிதாபிமான செயல்களைப் பற்றி பேசியுள்ளார்.

Advertisment

புகழின் 'ஸு கீப்பர்' (Zoo Keeper) திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும், குறிப்பாக குழந்தைகளால் அதிகம் விரும்பப்படுவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்தப் படத்தின் வெளியீடு தாமதமானதால், தனக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். '1947' திரைப்படத்தில் அவர் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தையும், அதற்கு கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் பி.சுரேஷ் ஆகியோர் அளித்த பாராட்டுகளும்அவரைஊக்குவித்ததாககூறினார்.

சமூக வலைத்தளங்களில் சிலரால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் புகழ் பதிலளித்தார். 'பணம் வந்தவுடன் மாறிவிட்டார்' போன்ற விமர்சனங்களுக்கு, தனது குடும்பத்தை வசதியாகப் பார்த்துக்கொள்வதே தனது விருப்பம் என்றும், அதை மற்றவர்களை மகிழ்விக்கப் பாசாங்கு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்கினார்.

'குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சிகளில் சக கலைஞர்களுடனான வாக்குவாதங்கள் மற்றும் நகைச்சுவைச் சண்டைகள் அனைத்தும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்றும் அவர் கூறினார். நடிகர் அஜித்துடன் 'வலிமை' படத்தில் நடித்த அனுபவத்தையும், சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் பணியாற்றியதையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

Advertisment
Advertisements

தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் இந்தப் பேட்டியில் புகழ் மனம் திறந்து பேசினார். தான் ஒரு பெண் குழந்தையின் தந்தை என்றும், 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடிகை ஷபானாவைத் தொட்டதற்காகத் தவறாகப் பேசியவர்களுக்குத் தனது கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தினார். எனக்கு திருமணம் நடந்து முடிந்தது எனக்கும் பெண் குழந்தை உள்ளது, அப்படி பேசுவதெயெல்லாம் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார். மேலும் ஷபானாவுக்கு திருமணம் ஆனது தனக்கும் தெரியும் என்றார்.

மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் சமூகப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 579 நாட்களாகத் தினமும் 50 பேருக்கு உணவு அளித்து வருவதாகவும் அவர் கூறினார். தனது சொந்தப் போராட்டங்களில் பசியின் வலியைக் கண்டதால் இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்வதாகவும், ஒருவேளை தனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் இந்தச் சேவை தொடர வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Vijaytv Pugazh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: