கடந்த மாதம், 15 வயது சிறுமி குருகிராமில் இருந்து தர்பங்காவில் உள்ள தனது கிராமத்திற்கு உடல்நிலை சரியில்லாத தந்தையை சைக்கிளில் ஏற்றி வந்து ஊடகத்தில் வைரலானார். இப்போது, அந்த சிறுமி ஜோதி குமாரி தனது பயணத்தைப் பற்றிய ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கத் தயாராகிவிட்டார்.
செலவே இல்லாத டாப் 5 உணவுகள்: நோய்களுக்கு டாட்டா!
பல புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கையை நாசமாக்கிய நாடு தழுவிய பூட்டுதலுக்கு மத்தியில், படத்திற்காக கையெழுத்திட்டது குறித்து ”நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார் ஜோதி.
திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மீதான ஆர்வத்தால் ஒன்றுபட்ட நான்கு நண்பர்கள், ஜோதி வாழ்க்கை கதைக்கான உரிமையைப் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தில் படபிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, படத்தை இயக்கும் ஷைன் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
‘ஆத்மனிர்பர்’ என்று பெயரிடப்படவுள்ள இப்படம், ஜோதியின் கதையை மட்டுமல்லாமல், மே மாதத்தில் கடினமான பயணத்தை மேற்கொள்ள வழிவகுத்த மற்ற சிக்கல்களையும் பற்றி பேசும். மத்திய கிழக்கில் பணிபுரியும் மிராஜ், பைரோஸ், கிருஷ்ணா மற்றும் சஜித் நம்பியார் ஆகியோர் இந்த படத்திற்கான உரிமையை பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தம் பழமை வாய்ந்த வெமக்ஃபில்ம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும்.
குருக்ராமில் இருந்து தர்பங்காவுக்கு ஜோதி பயணம் செய்த பல இடங்களில் படமாக்கப்படும், இது ஆவணப்படமாக இருக்காது. வேறு பல சம்பவங்களைச் சேர்ப்பதன் மூலம் இது மிகவும் கற்பனையாக இருக்கும் என்று கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஜோதியின் தந்தை பாத்திரத்திற்கான நடிகர் இறுதி செய்யப்பட்டுள்ளார்.
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ரயில் நிலையங்களில் கொரோனா அறியும் கேமரா
இந்தப் படம் இந்தி, ஆங்கிலம் மற்றும் மைத்திலி ஆகிய மொழிகளிலும், பிற மொழிகளில் டப்பிங் செய்யப்படும். சர்வதேச பார்வையாளர்களைப் பொறுத்தவரை, ‘ஒரு புலம்பெயர்ந்தவரின் பயணம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Cycle rider jyoti kumari to play lead in film based on her life
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?