சிவகார்த்திகேயன் செய்த துரோகம்: போட்டுடைத்த டி.இமான்!

சீமராஜா படத்துக்கு பின்னர் சிவகார்த்திகேயன், டி.இமான் கூட்டணி பிரிந்தது. அதன்பின்னர், இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு டி.இமான் இசையமைக்கவில்லை.

சீமராஜா படத்துக்கு பின்னர் சிவகார்த்திகேயன், டி.இமான் கூட்டணி பிரிந்தது. அதன்பின்னர், இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு டி.இமான் இசையமைக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Sivakarthikeyan D Iman Clash

இருவரின் பிரிவு குறித்து கோடம்பாக்கத்தில் பல்வேறு வதந்திகள் வலம்வருகின்றன.

Sivakarthikeyan D Iman Clash: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் அவரது மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படம், “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. 2013ல் வெளியான இந்தப் படத்தில் கதாநாயகியின் தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார்.

Advertisment

படத்தில் டி. இமானின் ஊதாக் கலரு ரிப்பன் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. அதைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு டி. இமான் இசையமைத்து இருந்தார்.

இந்தப் படங்களின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. இந்த நிலையில், சீமராஜா படத்துக்கு பின்னர் இந்தக் கூட்டணி பிரிந்தது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு டி.இமான் இசையமைக்கவில்லை.
இருவரின் பிரிவு குறித்து கோடம்பாக்கத்தில் பல்வேறு வதந்திகள் வலம்வருகின்றன. சிவகார்த்திகேயன் தனிப்பட்ட முறையில் டி. இமானுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் அந்த செய்திகள் நீளும்.

இதற்கிடையில் டி. இமான் வலையொளி (யூ-ட்யூப்) ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்தப் பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்த ஜென்மத்தில் நான் சிவகார்த்திகேயன் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற மாட்டேன். அது நடக்காது” என்றார். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தமக்கு செய்த துரோகத்தை வெளியில் சொல்ல முடியாது. அது தனிப்பட்ட முறையிலானது” என்றார்.

Advertisment
Advertisements

இது குறித்து மேலும் டி. இமான், “சிவகார்த்திகேயன் உடடன் இனிமேலும் சேர்ந்து பயணிப்பது என்பது கடினமான காரியம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம்.
அதை என்னால் வெளியே சொல்ல முடியாது.

ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு” என்றார். தொடர்ந்து அந்த துரோகத்தை சிவகார்த்திகேயனிடம் கேட்டுவிட்டதாகவும் அதற்கு அவர் அளித்த பதிலை என்னால் சொல்ல முடியாது என்றும் கூறினார்.

இந்தப் பேட்டி சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகிவருகிறது. பலரும் பகிர்ந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ற என்றும் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்.

இதற்கிடையில் சினிமா விமர்சகர் ஒருவரின் பதிவு வைரலாகிவருகிறது. பெயர் குறிப்பிடாமல் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட விமர்சகர் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: