Dabboo Ratnani’s Calendar Shoot : சினிமா பிரபலங்கள் காலண்டர் ஷூட்டில் கலந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு செலிபிரட்டி ஃபோட்டோகிராஃபர் ஜி.வெங்கட்ராம் நடத்திய காலண்டர் ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகின. நடிகை சுஹாஷினியின் ‘நாம்’ என்ற தொண்டு நிறுவனத்துக்காக ரவி வர்மாவின் ஓவியங்களை அடிப்படையாக வைத்து அவர் அந்த படங்களை எடுத்திருந்தார்.
அந்த வகையில் தற்போது பாலிவுட் செலிபிரட்டி ஃபோட்டோகிராஃபர் தபு ரட்னானி ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், சன்னி லியோன் உள்ளிட்ட பிரபலங்களை வைத்து தனது கேலண்டர் ஷூட்டை நடத்தியிருக்கிறார். அந்தப் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.










