தாதாசாகேப் பால்கே விருது: உணர்ச்சிப் பூர்வமாக நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

இந்திய திரையுலகின் மிக உயரிய தாதாசாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது நண்பர் ராஜ் பகதூர், அண்ணன் சத்யநாராயணன், குருநாதர் பாலச்சந்தருக்கும் ரஜினிகாந்த் உணர்ச்சிப் பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

dadasaheb phalke award, rajinikanth, super star rajinikanth, தாதாசாகேப் பால்கே விருது, ரஜினிகாந்த், ரஜினிக்காந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு, rajinikanth thanks, rajinikanth says thanks, rajini dedicated fans, ரஜினிகாந்த் நன்றி, rajinikanth gets dadasaheb pahalke award, tamil cinema, indian cinema

இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகின் மிக உயரிய தாதாசாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது நண்பர் ராஜ் பகதூர், அண்ணன் சத்யநாராயணன், குருநாதர் பாலச்சந்தருக்கும் ரஜினிகாந்த் உணர்ச்சிப் பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதாசாகேப் விருது நடிகர் ரஜினிகாந்த்துகு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்துக்கு 2019ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஆளுமைகள் எல்.வி.பிரசாத்துக்கு 1982-ம் ஆண்டும், 1996-ல் நடிகர் சிவாஜி கணேசனுக்கும் 2010-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தருக்கும் இதுவரை தாதாசாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ் சினிமா துறையில் இருந்து 4வது கலைஞராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருதை பெறுகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது அளிக்கப்பட்டது அப்போது, நடைபெற்றா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் அமிதாப்பச்சனும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் குறிப்பாக தனது நண்பர் ராஜ் பகதூருக்கும் அண்ணன் சத்ய நாராயணாவுக்கும் குருநாதர் பாலச்சந்தருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்திய திரையுலகின் மிக உயரிய தாதாசாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டுக்கும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் கே.பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாகர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்திய திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டுக்கும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் கே.பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாகர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நண்பர் கமல், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dadasaheb phalke award winner rajinikanth thanks to pm modi and friend raj bahadur brother sathya narayana director balachander

Next Story
சக நடிகைகளுக்கு சவால் விடும் சிக்ஸ்பேக்: பிக்பாஸ் பிரபலத்தின் வைரல் புகைப்படம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com