Dadasaheb Phalke IFF Awards 2024 | Shah Rukh Khan | Atlee | Nayanthara | Anirudh: தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024 வென்றவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஷாருக்கான், ராணி முகர்ஜி, நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வாங்கா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விருதுகளை வென்றுள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநரான அட்லீ இயக்கிய ஜவான் படம் விருதுகளை அள்ளியுள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்த பாலிவுட் உச்சநட்சத்திரம் ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
ஜவான் படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு சிறந்த இசை பிரிவில் விருது வழங்கப்படுள்ளது. இதேபோல், சிறந்த இயக்குனர் (விமர்சகர்கள்) பிரிவில் ஜவான் படத்திற்காக இயக்குநர் அட்லீ விருது வென்றுள்ளார்.
HQ pictures from last night as SRK wins the Best Actor Award, while his Jawan co-star Nayanthara bags the Best Actress Award at the Dadasaheb Phalke International Film Festival Awards 2024!🔥💥@iamsrk @NayantharaU @Atlee_dir @RedChilliesEnt#Jawan #ShahRukhKhan #SRK #Nayanthara… pic.twitter.com/m4JwVfZxqF
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) February 21, 2024
This one at Dadasaheb Phalke International Film Festival Awards 2024 🏆 Best Actor Female~ JAWAN 👍 pic.twitter.com/LRPH5jbtFV
— Nayanthara✨ (@NayantharaU) February 20, 2024
இதனிடையே, அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. விமர்சகர்கள் பிரிவில் சாம் பகதூர் படத்தில் நடித்ததற்காக விக்கி கௌஷல் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024 வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு:
சிறந்த படம்: ஜவான்
சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்): 12த் ஃபெயில்
சிறந்த நடிகர்: ஷாருக்கான், ஜவான்
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி, மிஸ் சாட்டர்ஜி vs நார்வே
சிறந்த நடிகை (விமர்சகர்கள்): கரீனா கபூர் கான், ஜானே ஜான்
சிறந்த நடிகர் (விமர்சகர்கள்): விக்கி கௌஷல், சாம் பகதூர்
சிறந்த இயக்குனர்: சந்தீப் ரெட்டி வங்கா, அனிமல்
சிறந்த இயக்குனர் (விமர்சகர்கள்): அட்லீ, ஜவான்
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர், ஜவான்
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): வருண் ஜெயின் மற்றும் சச்சின் ஜிகர், தேரே வாஸ்தே (ஜாரா ஹட்கே ஜரா பச்கே)
சிறந்த பின்னணி பாடகி (பெண்): ஷில்பா ராவ், பெஷரம் ரங் (பதான்)
எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகர்: பாபி தியோல், அனிமல்
சிறந்த துணை நடிகர்: அனில் கபூர்
சிறந்த ஒளிப்பதிவாளர்: ஞான சேகர் V.S., IB71
நம்பிக்கைக்குரிய நடிகர்: விக்ராந்த் மாஸ்ஸி, 12த் ஃபெயில்
நம்பிக்கைக்குரிய நடிகை: அதா ஷர்மா, கேரளா ஸ்டோரி
பல்துறை நடிகை: நயன்தாரா
தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகை: ரூபாலி கங்குலி, அனுபமா
தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகர்: நீல் பட், கும் ஹை கிசிகே பியார் மேயின்
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடர்: கும் ஹை கிசிகே பியார் மேயின்
வெப் சீரிஸில் சிறந்த நடிகர்: ஷாஹித் கபூர், ஃபார்ஸி
வெப் சீரிஸில் சிறந்த நடிகை: கரிஷ்மா தன்னா, ஸ்கூப்
சிறந்த தொடர்: ஃபார்ஸி
திரைப்படத் துறைக்கு சிறந்த பங்களிப்பு: மௌசுமி சாட்டர்ஜி
இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு: கே.ஜே. யேசுதாஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.