தாதாசாகிப் பால்கே விருது 2020 : தமிழில் விருது பெறும் அஜித், தனுஷ், ஜோதிகா

தென்னிந்திய சினிமாவில் 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித், தனுஷ், பார்த்தீபன்,ஜோதியாக ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகிப் பால்கே அவர்களின் நினைவாக கடந்த 1969-ம் ஆண்டு முதல் இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் தாதாசாகிப் பால்கே  விருது வழங்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் விருதை ஹிந்தியின் பழம்பெரும் நடிகை தேவிகா ராணி பெற்றுக்கொண்டார். குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தென்னிந்திய திரைப்படத்துறையில் 2020-ம் ஆண்டு சிறந்த பங்களிப்பை கொடுத்த கலைஞர்களுக்கு புத்தாண்டு (நேற்று) தினத்தில் தாதாசாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படத்துறையில், முன்னணி நடிகர்களான, அஜித் குமார், மோகன்லால், தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, சிவராஜ்குமார் மற்றும் பலருக்கு 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்படத்துறையில் விருது பெற்ற நடிகர்கள் விபரம்:

தமிழ் :

பல்துறை நடிகர்:  அஜித் குமார்

சிறந்த நடிகர்: தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகை: ஜோதிகா (ராட்சாசி)

சிறந்த இயக்குனர்: ஆர் பார்த்திபன் (ஒத்தா செருப்பு அளவு 7)

சிறந்த படம்: டூலெட்

சிறந்த இசையமைப்பானர் : அனிருத் ரவிச்சந்தர்

இதில் தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் தாழ்த்தப்பட்ட சமூதாயத்தின் அவலநிலையை எடுத்துரைக்கும் வகையில், வெளியான அசுரன் படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப்படங்களில் முதலிடத்தை பிடித்தது. அதே ஆண்டு ஜோதிகா நடிப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படமாக வெளியன ராட்சஷி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் தமிழ் சினமாவில் புதிய முயற்சியாள ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் வைத்து எடுக்கப்பட்டது. சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படம் பாண்டிச்சேரி அரசின் உயரிய விருதை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் இயக்குநர் பார்த்திபன் சிறந்த இயக்குநருக்கான தாதாசாகிப் பால்கே விருது பெற்றுள்ளார்.

மலையாளம் :

மலையாளத்தின் பல்துறை நடிகர்: மோகன்லால்

சிறந்த நடிகர்: சூரஜ் வெஞ்சராமுடு (அண்ட்ராய்டு குஞ்சப்பன் Ver 5.25)

சிறந்த நடிகை: பார்வதி திருவொத்து (உயாரே)

சிறந்த இயக்குனர்: மது சி நாராயணன் (கும்பலங்கி நைட்ஸ்)

சிறந்த படம்: உயாரே சிறந்த

இசை இயக்குனர்: தீபக் தேவ்

தெலுங்கு:

மிகவும் பல்துறை நடிகர்: நாகார்ஜுனா அக்கினேனி

சிறந்த நடிகர்: நவீன் பாலிஷெட்டி (முகவர் சாய் சீனிவாச ஆத்ரேயா)

சிறந்த நடிகை: ரஷ்மிகா மந்தண்ணா (அன்புள்ள தோழர்)

சிறந்த இயக்குனர்: சுஜீத் (சாஹோ) சிறந்த படம்: ஜெர்சி

சிறந்த இசையமைப்பாளர்: எஸ் தமன்

கன்னடம்:

மோஸ்ட் வெர்சடைல் நடிகர்: சிவராஜ்குமார்

சிறந்த நடிகர்: ரக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)

சிறந்த நடிகை: தான்யா ஹோப் (யஜமனா)

சிறந்த இயக்குனர்: ரமேஷ் இந்திரா (பிரீமியர் பத்மினி)

சிறந்த படம்: முகாஜ்ஜியா கனசுகலு

சிறந்த ,இசையமைப்பாளர்: வி ஹரிகிருஷ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Dadasakip dadasakib phalke award 2020 for south indian cinema

Next Story
நடிகர் வி்ஜயின் கோரிக்கைகளை நிராகரித்த தமிழக அரசு : ஏமாற்றத்தில் திரையுலகம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com