விஜய் டிவி சீரியலில் புதிய பிரபலம்: கதையில் திருப்புமுனை தருவாரா இந்த டான்சர் ஆனந்தி?

Dancer anandhi joins Vijay TV Rajapaarvai Serial shooting spot photos: ராஜ பார்வை சீரியலில் ஆனந்தி; ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்; நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சீரியலில் நடிக்கும் ஆனந்திக்கு ரசிகர்கள் வாழ்த்து

விஜய் டிவியின் ராஜ பார்வை சீரியல் மூலம், நீண்ட இடைவெளிக்கு பின்னர், சீரியலில் நடிக்கிறார் ஆனந்தி.

விஜய் டிவியில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜ பார்வை. பார்வையற்ற இளைஞனின் வாழ்வில் வரும் பெண்ணால் ஏற்படும் மாற்றங்கள் என இந்த சீரியலின் வித்தியாசமான கதையமைப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில், பார்வையற்ற இளைஞன் ஆனந்த் கதாப்பாத்திரத்தில் முனாஃப் ரஹ்மானும், அவனின் மனைவி சாருவாக ராஷ்மி ஜெயராஜூம், ஆனந்தின் தம்பி அரவிந்தாக விகாஷ் சம்பத்தும், ஆனந்தின் தாய் மஹாலக்‌ஷ்மியாக ஆர்த்தி ராம்குமாரும் நடித்து வருகின்றனர்.

பணக்கார இளைஞனான ஆனந்த் ஒரு விபத்தில் பார்வையை பறிக்கொடுக்கிறான். இதற்கு காரணம் அரவிந்த் என நினைக்கும் மகாலக்‌ஷ்மி, அவனை வெறுக்கிறாள். ஆனால் தன் தம்பி மீது பாசமாக இருக்கிறான் ஆனந்த். இந்த நிலையில் ஆனந்தின் வாழ்வில் சாரு என்ற நடுத்தர குடும்பத்துப் பெண் நுழைகிறாள். இதனால் அவன் வாழ்வில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்கள், அவர்களுக்குள்ளான காதல் என சீரியலின் கதை சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் டான்சரும் நடிகையுமான ஆனந்தி ராஜ பார்வை சீரியலில் இணைந்துள்ளார். இந்த தகவலை ஆனந்தாக நடிக்கும் முனாஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆனந்தியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ராஜ பார்வை குடும்பத்திற்கு வரவேற்கிறேன், புதிய கேரக்டர் அறிமுகம், நிறைய, திருப்பங்களையும் ட்விஸ்ட்களையும் எதிர்ப்பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

ஆனந்தியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராஜ பார்வை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, சீரியலில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பதிவில், மீண்டும் விஜய் டிவி குடும்பத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி, மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ராஜபார்வை சீரியல் பார்த்து ஆதரவு தாருங்கள், வான்மதி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், ஹீரோ ஆனந்திற்கு இரண்டாவது ஜோடியாக நடிக்கிறேன், இது ஆரம்பம் தான் என பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆனந்தி விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர், பின்னர் பாய்ஸ் Vs கேர்ள்ஸ், மானாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டார். ரௌத்திரம், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சமீபத்தில் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது அஜய்யுடன் கலந்துக் கொண்டார்.

ஆனந்தி யமுனா, கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், யமுனா, கனா காணும் காலங்கள், கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ராஜ பார்வை சீரியல் மூலம் சீரியலில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dancer anandhi joins vijay tv rajapaarvai serial shooting spot photos

Next Story
Vijay TV Serial; எகிறும் கண்ணம்மாவை அடக்கும் வெண்பா… செம வில்லி தான்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com