உங்க திறமை வேற லெவல்: ராதாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மூக்குத்தி முருகன்

பாடுவதைத் தவிர, பார்ப்பதை உடனே வரையும் திறமையும் முருகனுக்கு இருந்தது

Dancing Super Stars, Vijay TV
Dancing Super Stars, Vijay TV

Dancing Superstars : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வார இறுதி ஸ்பெஷலாக இடம் பெற்றிருக்கிறது.

சுயதணிக்கை செய்துகொள்ளும் கலை – பண்பாட்டு உலகம் !

இந்நிகழ்ச்சியில் ஆலியா மானஸா, சாண்டி, ஷெரின், மஹத், யாஷிகா உள்ளிட்டோர் நடுவர்களாக உள்ளனர். கிராண்ட் ஃபினாலே என்பதால், நடிகை ராதா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார். அப்போது சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மூக்குத்தி முருகன் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

கேள்வி ஞானத்தில் பாடத் தொடங்கிய முருகனுக்கு, விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாட வாய்ப்புக் கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர், ஒவ்வொரு சுற்றிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தார். தவிர, நிகழ்ச்சியின் இடையிடையே பிரியங்காவும், மாகாபா-வும் இவரை கலாய்ப்பார்கள், அவரும் பதிலுக்கு இவர்களை கிண்டல் செய்வார். பாடுவதைத் தவிர, பார்ப்பதை உடனே வரையும் திறமையும் முருகனுக்கு இருந்தது. அவ்வப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்கு படம் வரைந்து பரிசளிப்பார். அதோடு இறுதிப் போட்டியில் டைட்டிலையும் வென்றார்.

உடலை டோன் செய்யும் ‘மயில்’ போஸ்: ஷில்பா ஷெட்டியின் அழகு சீக்ரெட்

இந்நிலையில் டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ராதாவையும் இம்ப்ரெஸ் செய்திருக்கிறார். ’நீ தானா அந்தக் குயில்’ பாடலைப் பாடியவாறு, மேடையில் ராதாவை அப்படியே வரைந்து பரிசளித்தார் முருகன். திக்கு முக்காடியா ராதா, முருகனை வெகுவாக பாராட்டினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dancing super stars vijay tv mookuthi murugan radha

Next Story
விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதியின் போட்டோ- ஃபேக் ஐடியின் #masterupdate ட்வீட்டால் குழம்பிய ரசிகர்கள்master update vijay sethupathy kissed vijay
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com