Darbar Audio Launch Updates : பற்ற வைத்த லாரன்ஸ்; அமைதியாய் கவனித்த ரஜினி – தர்பார் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

Rajinikanth's Darbar Movie Audio Launch : தர்பார் இசை வெளியீட்டு விழா

By: Dec 7, 2019, 10:41:31 PM

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த நவ.7ம் தேதி ‘சும்மா கிழி’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரெக்கார்ட் பிரேக் படைத்தது.

இந்நிலையில், தர்பார் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்வு, டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில், மாலை 5 மணிக்கு தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில், படத்தின் மீதமுள்ள பாடல்கள் அனைத்தும் வெளியிடப்படுகிறது. தவிர, அரசியல் வருகையை எதிர்நோக்கியுள்ள ரஜினி, இன்றைய விழாவில் அதுகுறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

தர்பார் இசை வெளியீட்டு விழா லைவ் அப்டேட்ஸ் இங்கே,

Live Blog
Super Star Rajinikanth's Darbar Audio Launch : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் இசை வெளியீட்டு விழா லைவ்
22:09 (IST)07 Dec 2019
தனி வழி பாடல்...

தர்பார் படத்தின் 'தனி வழி' எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

21:52 (IST)07 Dec 2019
அதான் ரஜினி சார்...

ஹாஸ்பிட்டல் ல ஒருத்தன் கேட்டானே நீங்க யாருனு நம்மலாம் அங்க இருந்தா எவ்ளோ கோவம் வந்திருக்கும்.ஆனா அந்த இடத்துல am ரஜினிகாந்த் னு சொன்னாரே அதான் ரஜினி சார் - விவேக்

21:38 (IST)07 Dec 2019
குறிப்பிட்ட ஓரு அரசியல் தலைவர் இந்த நாட்டிற்க்கே கேடு

'அரசியல் நாகரீகமே இல்லாமல் சிலர் பேசுகின்றனர், ரஜினியை தவறாக பேசினால் நான் திரும்ப பேசுவேன். குறிப்பிட்ட ஓரு அரசியல் தலைவர் இந்த நாட்டிற்க்கே ஒரு கேடு. தலைவரே அமைதியா இருக்க சொன்னாலும் இனி நா அமைதியா இருக்க மாட்டேன். தலைவர் என்கூட பேசுலனாலும் சரி. இனி நான் பதிலடி கொடுப்பேன்' - ராகவா லாரன்ஸ்

21:04 (IST)07 Dec 2019
4 ரூபாய்க்கு பாட்ஷா படம்

"பாட்ஷா படத்த நான்கு ரூபாய் டிக்கெட் எடுத்து அடிச்சு புடிச்சு போய் பாத்தவன் நான். இன்னைக்கு அவர் கூடவே நடிக்குறேன் ரொம்ப சந்தோசமா இருக்குது" என்று நடிகர் யோகிபாபு பேசியுள்ளார்.

20:57 (IST)07 Dec 2019
Darbar Audio Launch

'எல்லாரும் தலைவர படம் Publicity காக பேசுறதா சொல்றாங்க'

டேய் Publicityக்கு மறுபேறே ரஜினி தான் டா.... 

என்று லாரன்ஸ் பேசியுள்ளார். 

மேலும் அவர் பேசுகையில், 'சின்ன வயசுல கமலஹாசன் போஸ்டர்ல சாணி எடுத்து அடிப்போம். அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன மேடையில் ஸ்டாலின் தொடங்கி அவங்க பேரை எனக்கு சொல்ல புடிக்கல. அவங்க எல்லார் பத்தியும் பெருமையாக பேசுனவர் என் தலைவர். ஆனா இப்போ நிலம மாறிடுச்சு.. சேர்ந்து வர்ர மாறி இருக்குதே. தலைவரே ஒரு அதிசயம் அற்புதம் தான்'.

20:34 (IST)07 Dec 2019
சூப்பர் ஸ்டார் எங்கள் நாட்டவர் என்று....

“எந்த நாட்டிற்கு போனாலும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம் சூப்பர் ஸ்டார் எங்கள் நாட்டவர் என்று!” - நடிகர் அருண்விஜய்

20:29 (IST)07 Dec 2019
நாட்டு மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்பவர் ரஜினி - ராம் லட்சுமணன்

தன்னோட குடும்பம் மட்டும் நல்லா இருக்கணும்னு நினைச்சா அது Common Man. இந்த நாட்டு மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சா அது Super Man

அதான் ரஜினி சார்.

சாப்பிடும் போதும் தூங்கும் போதும் 24.மணி நேரமும் மக்கள் நலன் பத்தி தன் ரசிகர்கள பத்தி தான் பேசிக்கொண்டு நினைத்துக்கொண்டு இருப்பார் சூப்பர்ஸ்டார்.

- படத்தின் சண்டைக் காட்சி இயக்குனர்கள் ராம் லட்சுமணன்

20:14 (IST)07 Dec 2019
அரங்கம் அதிர ரஜினிகாந்த்....
19:48 (IST)07 Dec 2019
சூப்பர் ஸ்டார் ரஜினி களத்தில்....

தர்பார் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சும்மா, கெத்தா ஸ்டைலா வந்த போது,

19:46 (IST)07 Dec 2019
விழா நாயகன் அனிருத்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில், இசை நாயகன் அனிருத்

19:45 (IST)07 Dec 2019
இதோ யோகிபாபு...

தர்பார் அரங்கில் விவேக், யோகிபாபு

19:13 (IST)07 Dec 2019
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி

18:38 (IST)07 Dec 2019
Darbar Audio Launch: பாடலாசிரியர் விவேக்

தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில், இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள விவேக்...

18:22 (IST)07 Dec 2019
ரஜினிகாந்த் என்ட்ரி....

இன்னும் சில நிமிடங்களில் ரஜினியின் என்ட்ரி,

18:05 (IST)07 Dec 2019
தர்பார் இசை வெளியீட்டு விழா

இயக்குனர் ஷங்கர், நடிகர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்துள்ளனர்.

17:41 (IST)07 Dec 2019
Darbar Audio Launch

தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த நடிகர் ஸ்ரீமன்

17:22 (IST)07 Dec 2019
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் என்ட்ரி

தர்பார் இசை வெளியீட்டு விழாவின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் என்ட்ரி ஒத்திகையின் போது,

17:18 (IST)07 Dec 2019
#DarbarAudioLaunch - இதுதான் ரஜினியின் நாற்காலியோ?

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிக்காக வைக்கப்பட்டிருக்கும் இருக்கை.

17:09 (IST)07 Dec 2019
தர்பார் இசை வெளியீட்டு விழா : விழாவில் குவியும் இளைஞர்கள்

ரஜினி ரசிகர்கள் பேரன், பேத்தி எடுத்துவிட்டார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இங்கே இளைஞர்களும் அதிகளவில் குவிகின்றனர். 

17:08 (IST)07 Dec 2019
Darbar Audio Launch : இது இசை வெளியீட்டு விழாவா? இல்லை அரசியல் பொதுக் கூட்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் பட இசை வெளியீட்டு விழாவுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரஜினி ரசிகர்கள் வந்துள்ளனர். 

Darbar Audio Launch Updates:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், 2020 பொங்கலுக்கு வெளியாகிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் சிங்கிளான ‘சும்மா கிழி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்று வருகிறது. அதோடு தர்பார் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று திருநங்கைகளின் ’ஸ்பைசி கேர்ள்ஸ்’ என்ற இசைக்குழுவும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் தர்பார் படத்திற்கான பாடல் பதிவில் அவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதைப்பற்றி மூவரில் ஒருவரான சந்திரமுகி, “தர்பார் படத்தில் திருநங்கைகளின் நடனமும் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில், குரலில் மாற்றத்துடன், வழக்கமான பாடகர் பாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நாங்கள் மூன்று பேர் – ராச்சனா, பிரியா மற்றும் நான் – ஹைதராபாத்தில் ’ஸ்பைசி கேர்ள்ஸ்’ என்ற இசைக் குழு வைத்திருக்கிறோம். பாலின உரிமை, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் நாங்கள் பாடுகிறோம். இந்த வாய்ப்பு வந்தபோது, அதிர்ஷ்டத்தை எங்களால் நம்ப முடியவில்லை” என்றார்.

விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா, தர்பார் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத் தக்கது.

Web Title:Darbar audio launch live updates super star rajinikanth ar murugadoss anirudh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X