Darbar Audio Launch: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், 2020 பொங்கலுக்கு வெளியாகிறது.
Advertisment
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்று வருகிறது. அதோடு தர்பார் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று திருநங்கைகளின் ’ஸ்பைசி கேர்ள்ஸ்’ என்ற இசைக்குழுவும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் தர்பார் படத்திற்கான பாடல் பதிவில் அவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதைப்பற்றி மூவரில் ஒருவரான சந்திரமுகி, “தர்பார் படத்தில் திருநங்கைகளின் நடனமும் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில், குரலில் மாற்றத்துடன், வழக்கமான பாடகர் பாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நாங்கள் மூன்று பேர் - ராச்சனா, பிரியா மற்றும் நான் - ஹைதராபாத்தில் ’ஸ்பைசி கேர்ள்ஸ்’ என்ற இசைக் குழு வைத்திருக்கிறோம். பாலின உரிமை, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் நாங்கள் பாடுகிறோம். இந்த வாய்ப்பு வந்தபோது, அதிர்ஷ்டத்தை எங்களால் நம்ப முடியவில்லை" என்றார்.
Advertisment
Advertisement
விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா, தர்பார் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.