Darbar Day 1 Box Office Collection: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
GLORIOUS OPENING for #Darbar in Chennai city - Day1 gross is a phenomenal 2.27 CR ????????
It's a record second 2 CR+ city opening day for #SuperstarRajinikanth after the alltime city opening topper #2Point0 ????
— Kaushik LM (@LMKMovieManiac) January 9, 2020
ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாகவும், யோகிபாபு,யோகி பாபு, பாலிவுட் நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். தர்பார் வசூலைப் பொறுத்தவரை, வெளியீட்டுக்கு முன்னரே உலகளாவிய தியேட்டரிக்கல் மற்றும் நான் தியேட்டரிக்கல் உரிமத்தில், ரூ .200 கோடி கிளப்பில் ஏற்கனவே இணைந்துவிட்டது.
’ஒருநாள் தொடரில் இருந்து தோனி விரைவில் விலகுவார்’: ரவி சாஸ்திரி
#Darbar takes a Massive Opening in Hyd RTC X Roads..
Day 1 Gross: ₹ 12.05 Lakhs..
— Ramesh Bala (@rameshlaus) January 10, 2020
'தர்பார்' அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஒரு பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தியிருப்பதாக முன்னணி செய்தி போர்ட்டல் ஒன்று தெரிவிக்கிறது. அதாவது முதல் நாளில் அங்கு 4 லட்சம் அமெரிக்க டாலர் சம்பாதித்திருக்கிறதாம். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 160 இடங்களில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘பேய் கொம்பு’டன் சன்ரைஸ் காட்சிகள்: ஈரானில் புதிய திகில்
#Darbar off to a great start in #Australia
A$160,000 on Day 1..
— Ramesh Bala (@rameshlaus) January 10, 2020
சென்னையைப் பொறுத்தவரை இப்படம் தொடக்க நாளில் ரூ.2.27 கோடியை வசூலித்துள்ளது. 2.0 க்குப் பிறகு, சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 2 கோடியை வசூலித்து இரண்டாவது முறையாக தான் ஒரு வசூல் மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் ரஜினி. தமிழைத் தவிர, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியான தர்பார், ஹைதராபாத்தில் முதல் நாளில் ரூ .12.05 லட்சம் சம்பாதித்துள்ளது.
#Darbar debuts at No.1 in #Malaysia#GSC Multiplex.. pic.twitter.com/G21Gg2Zq6o
— Ramesh Bala (@rameshlaus) January 10, 2020
தர்பார் அதன் தொடக்க நாளில் ஆஸ்திரேலியாவில் 160,000 டாலர் (ரூ. 78 லட்சம்) வசூலித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும், முதல் நாளில் முன்னணி வசூலைப் பெற்றுள்ளது.
Darbar Box Office Chennai: நெருங்க முடியுமா? சென்னை பாக்ஸ் ஆபீஸில் புயலாக சீறும் தர்பார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.