ஆன்லைன் ட்ராக்கர்ஸையும் விமர்சகர்களையும் அரசியல் அழுத்தங்களையும் அதிரவைக்கும் ரஜினி ரசிகர்கள் அசுரவேகத்தில் 500 கோடியை நெருங்குகிறது தர்பார்.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
கடந்த வாரம் வெளியான ரஜினியின் தர்பார் அடுக்கடுக்கான சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்விமர்சனங்களையும் சந்தித்து வரும் நிலையில் படத்துக்கான வசூல் கூடுவது மிகுந்த ஆச்சர்யத்தை அளிப்பதாக முன்னாள் விநியோகஸ்தரும் சுமார் 35 ஆண்டுகாலமாக சினிமா தியேட்டர் நிலவரங்களை கவனித்துவரும் நபரான திரு.பதி அவர்கள் கூறுகின்றார்.
பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா இவர்தானாம் : சொல்றாங்க, தெரிஞ்சுக்குவோம்…..
அதுமட்டுமில்லால் அவரிடம் தற்போது ஆன்லைன் ட்ராக்கர்ஸ்கள் எனப்படும் வசூல் நிலவரங்களை வெளியிடும் நபர்கள் தரும் வசூல் நிலவரங்களைப் பற்றி கேட்டதற்கு, அவர்கள் பிழைப்பதற்காக தவறான புள்ளி விவரங்களை தருவதாகவும் அது சில தயாரிப்பாளர்களை நம்பவைக்க சில முன்னணி நடிகர்கள் என்பவர்களால் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் ரஜினியின் படங்களை யாருடனும் ஒப்பிடுவதே தவறு என்றும் தெரிவித்தார்.
மேலும் ரஜினி படம் அளவுக்கு பெரிய ஸ்க்ரீன் அதிக எண்ணிக்கை தியேட்டரில் திரையிடப்பட்டால் வேறு எந்த நடிகரின் படமும் மாபெரும் வெற்றிப்படமானாலும் 4 நாட்களுக்கு மேல் காட்சிகள் கேன்சலாவதும் தியேட்டர்கள் எண்ணிக்கை குறைவது ரஜினியின் ஆடியன்ஸ் மற்றும் ரசிக பலம் என்பது வேறலெவல் என்று முடித்தார்.
கடந்த மூன்று நாட்களில் இரண்டாம், மூன்றாம் நாள் செய்த வசூலைவிட ஞாயிற்றுக்கிழமை வசூல் கொடுத்தாக இருப்பது மட்டுமல்ல தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதாலும் வேறு எந்தப்படங்களும் தியேட்டரை ஆக்கிரமிக்காததாலும் தர்பார் மேலும் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் படம் தமிழகத்தில் 26.9 கோடியும், சென்னையில் மட்டும் 2.47 கோடியும், மதுரையில் மாநகரில் 2.01 கோடியும், காஞ்சிபுரம் திருவள்ளூர் ஏரியாவில் 4 கோடியும் வசூலித்த தர்பார், ஆந்திரா கர்நாடகா கேரளாவில் சேர்த்து 31.18 கோடியையும், வட இந்தியாவில் மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்டிராவில் மற்றும் டெல்லியில் மொத்தம் தமிழ் வெர்ஷனில் 124 ஸ்க்ரீனில் வெளியாகி 1.54 கோடியையும் வசூலித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இந்திய மதிப்புப்படி 1.1கோடி (இது மற்ற தமிழ் படங்களின் ஒட்டுமொத்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் விஜய் மட்டும் சற்று கூடுதலாக வசூலில் முன்னிலையில் இருப்பார் ஆனால் ரஜினி படங்களுடன் ஒப்பிட முடியாது).
தர்பார் படத்தை விமர்சனத்தால் ‘டர்ர்ர் பார்’ ஆக்கிய ப்ளூ சட்டை மாறன் – வீடியோ
ஐரோப்பிய நாடுகளில் சுவீடன், ஜெர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மொத்தமாக 69 திரையரங்கில் வெளியாகியிருக்கும் தர்பார் மற்ற இந்தியப்படங்களை விட மூன்று மடங்கு அதிகமாக திரையிடப்படும் என்பதும் வார வேலைநாட்களிலும் திரையிடப்படும் என்பதும் இதைவிட மூன்று மடங்கு குறைவான எண்ணிக்கையில் திரையிடப்படும் படங்கள்கூட வார இறுதி நாட்களில் மட்டுமே திரையிடப்படும் என்பதை கருத்தில் கொண்டாலே வசூல் நிலவரங்களை மற்ற படங்களுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது என்பது புரியும்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விடுமுறை நாள் வசூல் இந்திய மதிப்புப்படி 12 கோடியாகும். ஆஸ்திரேலியா 1கோடியே 69 லட்சமும், சிங்கப்பூர் மலேஷியா இந்தோனேஷியாவில் மட்டும் இந்திய மதிப்பின்படி 92 ஸ்க்ரீனில் 9.43 கோடியும் வசூலித்த தர்பார், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் 3.4 கோடியையும் வசூலித்துள்ளது.
இந்த வசூல் தமிழ் ஆந்திரா நீங்கலாக தமிழ் வெர்ஷன் மட்டுமே. தெலுங்கு, ஹிந்தி வெர்ஷன் உள்ளிட்ட வசூல் நிலவரங்களையும் கணக்கிட்டால் 120 கோடி ரூபாயை சர்வ சாதாரணமாகவும் தமிழ் வெர்ஷன் மட்டும் சற்றேறக்குறைய 70 முதல் 80 கோடியை வசூலித்துள்ளது (only sunday report). இது விடுமுறை தினங்களிலும் தொடர்வது ரசிகர்கள் , லேடிஸ் மற்று ம்கிட்ஸ் ஆடியன்ஸ் படத்திற்கு கூடுவது தொடர்வதாலும் அசுர வேகத்தில் 500 கோடியை தர்பார் நெருங்குவது உறுதியாகிவிட்டது.