darbar first look poster :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் ரெடியாகிக் கொண்டிருக்கும் புதிய படத்துக்கு தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது. தலைவரின் 167 ஆவது படமான தர்பாரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
darbar first look poster released: தலைவரின் தர்பார்!
பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமில்லை திரை பிரபலங்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 1980களில் வரும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று காலை படத்தில் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரை நீங்கள் உற்று கவனித்தால் நிறைய சுவாரசியங்கள் மற்றும் கதையின் தளமும் உங்களுக்கு புரியும்.
Here you go guys!!! The first look of our very own Thalaivar in #Darbar @rajinikanth @LycaProductions #nayanthara @santoshsivan @anirudhofficial #sreekarprasad #pongal2020 pic.twitter.com/SQesHjoNvh
— A.R.Murugadoss (@ARMurugadoss) 9 April 2019
போஸ்டரில் ரஜினி மீண்டும் இளமையாக,செம ஸ்டைலான தோற்றத்தில் காட்சி தருகிறார்.அவரின் கேரக்டரைக் காட்டும் விதமாக போலீஸ் சீருடை, பெல்ட், தொப்பி, துப்பறியும் நாய், துப்பாக்கிகள், குற்றம் நடந்த இடம் என காவல் துறை சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் வைத்து டிசைன் செய்துள்ளனர்.
பின்னணியில் மும்பை வரைபடமும், கேட் வே ஆஃப் இந்தியா நினைவுச் சின்னமும் இடம்பெற்றுள்ளது. கூடவே போஸ்டரில் படம் 2020-ல் பொங்கல் ரிலீஸ் என குறிப்பிட்டுள்ளது. இதனால் அடுத்த வருடமும் தலைவர் பொங்கலாகவே அமைய என ரசிகர்கள் ஆர்பரிக்க தொடங்கி விட்டனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். தர்பார் போஸ்டரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது அதில் இடம்பெற்றுள்ள ஆங்கில வாசகம் தான். “ “நான் நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா இருக்கிறத நீயே முடிவு பண்ணிக்கோ” என்பது தான்.
கண்டிப்பாக அடுத்த பொங்கல் தலைவரின் தர்பார் உடன் ஆரம்பம்.