Advertisment

டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் தத்தளித்த தர்பார் ! காஞ்சனாவே பரவாயில்லையாம்...

காஞ்சனா திரைப்படம் இதற்கு முன்பே பல்வேறு தருணங்களில் சன்டிவி ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar movie in suntv TRP rate last week

Darbar movie in suntv TRP rate last week

Darbar movie in suntv TRP rate last week : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது தர்பார் திரைப்படம். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நிவேதா தாமஸ்,  நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு இசை அமைத்திருந்தார் அனிருத்.

Advertisment

இந்த படம் க்ரிட்டிக் மற்றும் வணிக ரீதியாகவும் பெரும் தோல்வியை சந்தித்தது. ரசிகர்கள் இந்த படத்தின் கதையால் மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தை கடந்த சித்திரை 1-க்கு சன் டிவியில் அந்நிறுவனம் ஒளிபரப்பியது.  ஆனால் அப்போதும் கூட இந்த படத்தை பொதுமக்கள் யாரும் பார்க்க முன்வரவில்லை என்பதை டி.ஆர்.பி. ரேட்டிங் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க : காயத்ரியின் விர்ச்சுவல் ஃபோட்டோ ஷூட், ஐஸ்வர்யாவின் குவாரண்டைன் டைம் : படத் தொகுப்பு

ஊரடங்கு நிலவி வருவதால், எங்கும் ஷூட்டிங்குகள் நடைபெறவில்லை. அதே போன்று சின்னத்திரையில் நாடகங்கள் ஏதும் ஒளிபரப்பப்படவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி சில புதிய படங்களை திரையிட முடிவு செய்தது சன் டிவி. காஞ்சனா 3, தர்பார், சீமராஜா, திமிரு பிடிச்சவன், இருட்டு போன்ற படங்களை கடந்த வாரம் ஒளிபரப்பியது சன் டிவி. இதில் தர்பார் முதன்முறையாக திரையிடப்படும் படம். ஆனாலும் அதற்கு டி.ஆர்.பி. ரேட்டிங் காஞ்சனா 3-வை விட குறைவாகவே கிடைத்துள்ளது.  காஞ்சனா திரைப்படம் இதற்கு முன்பே பல்வேறு தருணங்களில் சன்டிவி ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Rajinikanth Darbar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment