தர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்?

ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரியின் மாடிக்கு சென்று சூட்டிங் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது

By: May 2, 2019, 8:54:13 PM

தர்பார் படத்தின் போட்டோக்கள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக, படக்குழுவினருக்கும், சூட்டிங் நடைபெற்று வரும் கல்லூரியின் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக , நிலவிய பரபரப்பை தொடர்ந்து சூட்டிங் இடம் மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் சூட்டிங், மும்பையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வருகிறது. சூட்டிங்கை வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் சிலர், தங்களுடைய மொபைல் போனில் எடுத்த போட்டோக்களை அடிக்கடி இணையதளங்கில் வெளியிட்டு வந்தனர்.

படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவே அந்த போட்டோக்களை கசிய விடுகிறதா என்ற சந்தேகமும் எழுந்த நிலையில், படங்கள் லீக்காவதற்கு மாணவர்கள் தான் காரணம் என தெரியவந்தது. இதனால் சூட்டிங்கை வேடிக்கை பார்க்க மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களுக்கும், படக்குழுவினர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லூரியின் மாடிக்கு சென்று சூட்டிங் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தால், சூட்டிங் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் ஆலோசனையில் இயக்குனர் முருகதாஸ் ஈடுபட்டுள்ளதாக படக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு, இந்த கல்லூரியிலேயே 3 மாதங்கள் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Darbar photo shoot rajinikanth ar murugadoss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X