தமிழகம் முழுவதும் தர்பார் ஃபீவர்: ரசிகர்களின் கொண்டாட்ட புகைப்பட தொகுப்பு

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்திருக்கிறார்கள்.

Darbar Release
Darbar Release

Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தர்பார் திரைப்படம் உலகம் முழுக்க 7000 ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ளது.

Tamilrockers: தர்பார் பாக்ஸ் ஆபீஸை பதம் பார்க்குமா?

கடந்த வருடம் பொங்கலுக்கு அவரின் ‘பேட்ட’ திரைப்படம் வெளியானது. ஆகையால் 1 வருடம் கழித்து ரஜினிகாந்தை திரையில் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைந்தனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்திருக்கிறார்கள். தவிர, யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

darbar release, darbar review
தர்பார் வெளியீட்டை முன்னிட்டு தியேட்டரில் திரண்டிருந்த ரசிகர்கள்
Darbar Movie Review Live, Darbar Movie Release Live
ரஜினி படத்தை மாலைகளால் அலங்கரித்திருக்கும் ரசிகர்கள்
Darbar Movie Review Live, Darbar Movie Release Live
பிரமாண்ட மலர் அலங்காரம்
Darbar Movie Review Live, Darbar Movie Release Live
ரஜினியின் சின்ன கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்
darbar release, rajinikanth
முதல் காட்சியைக் காண, அதிகாலையிலேயே திரையரங்கிற்கு படையெடுத்த ரசிகர்கள்

darbar release, rajinikanth
படம் பார்க்க வந்து ரீல் ரஜினியுடன் படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள்

இன்று முதல் மீண்டும் பொங்கல் பரிசு… நாளையும் ரேசன்கடைகள் இயங்கும்!

darbar release, rajinikanth
ரசிகர்களுடன் ரசிகையும் இணைந்த தருணம்
darbar release, rajinikanth
ஒரே மாதிரியான தர்பார் டீ ஷர்ட் அணிந்த ரஜினி ரசிகர்களின் தர்பார் கொண்டாட்டம்
darbar release, rajinikanth
தர்பார் திருவிழாவுக்கு தயாரான திரையரங்கம்
darbar release, rajinikanth
ரஜினியைப் போலவே உடையணிந்து படம் பார்க்க வந்த ரசிகர்

இப்படி சுவாரஸ்யங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது தர்பாரின் முதல் நாள் முதல் காட்சி. இருப்பினும் முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Darbar release fans celebration photo gallery rajinikanth

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com