Darbar Movie Release, Review: ரசிகர்கள் கொண்டாடும் ரஜினி இவர் தான்! வயசு 40 இருக்குமா??

Rajinikanth Starrer Darbar Release, Darbar Movie Review Live: உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் தர்பார் திருவிழா என இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Darbar Movie Release, Review
Darbar Movie Release, Review

Darbar Movie Review, Release Today Live Updates: ரஜினி ரசிகர்களுக்கு கடந்த வருடம் ‘பேட்ட’ பொங்கலாக இருந்தது. இந்த வருடம் ’தர்பார்’ பொங்கல். இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். ரஜினியின் 167-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை கூட்டியிருந்த ’தர்பார்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மாஸாக வெளியாகியுள்ளது.

தர்பார் ரிலீஸ்: தமிழ்ராக்கர்ஸுக்கு சவால் விடும் ரஜினி ரசிகர்கள்

Darbar Movie Release and Review Updates

தர்பார் பட புரொமோஷனின் ஒரு பகுதியாக, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ‘தர்பார் ரஜினி’யின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. அந்தப் படங்களை படத்தின் இசையமைப்பாளரும், ரஜினிகாந்தின் மருமகனுமான அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 4 விமானங்களில் தர்பார் ரஜினியின் உருவம் இடம் பெற்றிருப்பதை ஸ்பைஸ்ஜெட்டின் அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.

7000 திரைகளில் அதிரும் தர்பார்! தலைவர் ‘கெரியரில்’ நிலைத்து நிற்கும் படம்…

Live Blog

Darbar Movie Release and Review Updates

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் ரிலீஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்














16:18 (IST)09 Jan 2020





















பொங்கல் ட்ரீட்

இதை விட சிறந்த ட்ரீட் இருக்கவே முடியாது

16:08 (IST)09 Jan 2020





















வச்ச கண்ணு வாங்காம பாத்தேன்

ரஜினிக்கும் 70 வயதாகி விட்டது என்பதை நம்பவே முடியவில்லை என மும்பையில் தர்பார் படம் பார்த்த ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்

15:47 (IST)09 Jan 2020





















90’ஸ் புள்ளிங்கோ மிஸ் பண்ணிடாதீங்க

90’ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடிக்கும் என இந்த பயனர் தெரிவித்துள்ளார். 

15:39 (IST)09 Jan 2020





















சசிகலா குறித்த வசனம் – அமைச்சர் ஜெயக்குமார்

“பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் பணம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. அதாவது காசு இருந்தால் சிறைக் கைதி கூட ஷாப்பிங் செல்லலாம் என தர்பாரில் வசனம் உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்துதான்” என சசிகலா குறித்த வசனத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

15:23 (IST)09 Jan 2020





















தலைவர் படத்தைப் பார்க்க வந்த STR

தர்பார் படம் பார்க்க வந்த சிம்பு

15:13 (IST)09 Jan 2020





















தலைவர் செம மாஸ்

படம் முழுக்க ரஜினி பயங்கர எனெர்ஜியாக இருப்பதாக, படத்தைப் பார்த்த ரசிகர் ஐ.இ தமிழிடம் தெரிவித்தார்

14:59 (IST)09 Jan 2020





















வயசாகிடுச்சா? அவருக்கா?

வயசுங்கறது வெறும் நம்பர் தான் என இந்த பயனர் தெரிவித்துள்ளார். 

14:39 (IST)09 Jan 2020





















உங்களை 5 நிமிடமாவது கட்டியணைக்க வேண்டும்

தர்பார் படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என் அம்மா அழுதே விட்டார்கள். உங்களை 5 நிமிடமாவது கட்டியணைத்து அழ வேண்டும் என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார். 

14:23 (IST)09 Jan 2020





















தர்பார் ஒரு கொண்டாட்டம்

மொத்த படத்தையும் ரஜினிகாந்த் தனது தோளில் சுமந்திருப்பதாக இந்த விமர்சகர் தெரிவித்துள்ளார். 

14:09 (IST)09 Jan 2020





















ராகவா லாரன்ஸ் ட்வீட்

தர்பார் படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டையும், சண்டைக் காட்சிகளையும் வெகுவாக ரசித்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

14:05 (IST)09 Jan 2020





















சூப்பர் ஸ்டாரின் குட்டி ரசிகர்

ரஜினியின் குட்டி சசிகர் ஒருவர் ஆதித்ய அருணாச்சலம் போல் உடையணிந்து தியேட்டருக்கு வந்திருந்த குட்டி ரசிகர் ஒருவர்!

13:09 (IST)09 Jan 2020





















தர்பார் திருவிழா

தர்பார் படத்தை திருவிழா போல கொண்டாடும் சென்னையின் திரையரங்கம் 

12:55 (IST)09 Jan 2020





















படம் வேற லெவல்!

12:43 (IST)09 Jan 2020





















எனக்குள் இருக்கும் குழந்தை விழித்துக் கொண்டது

நான் சின்னக் குழந்தையில் எப்படி ரஜினியைப் பார்த்து வியந்தேனோ, அந்த வியப்பு இன்னும் என்னிடம் இருக்கிறது என இந்த பயனர் தெரிவித்துள்ளார். 

12:25 (IST)09 Jan 2020





















நியூயார்க் ரஜினி ரசிகர்கள்

நியூயார்க்கில் உள்ள ரஜினி ரசிகர்கள் தர்பார் வெளியீட்டை கேக் வெட்டி கொண்டாடினர்

12:01 (IST)09 Jan 2020





















சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம்

காலை 4 மணி முதலே ரஜினியின் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. படத்தில் ‘பணம் இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம்’ என்ற வசனம் வேறு ஒரு விஷயத்தை நினைவுப்படுத்தி ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. 

11:58 (IST)09 Jan 2020





















ரசிகர்கள் ரகளை

தர்பார் திரைப்படம் திண்டுக்கல் நகர் பகுதிகளில் திரையிடப்படாததால் ரஜினி ரசிகர்கள் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்

11:33 (IST)09 Jan 2020





















கொண்டாட்டத்தில் தியேட்டர்கள்

தர்பார் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகள் விழாக் கோலம் பூண்டிருக்கின்றன. சென்னையிலுள்ள முக்கிய திரையரங்கம் இது. 

11:25 (IST)09 Jan 2020





















ரஜினி ரசிகையின் கொண்டாட்டம்

ரஜினி ரசிகர்களுக்கு சமமாக அவரது ரசிகைகளும் உற்சாகத்தில் உள்ளனர்

11:18 (IST)09 Jan 2020





















ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டம்

தர்பார் திருவிழா

11:16 (IST)09 Jan 2020





















எல்லாருக்கும் பிடிச்ச சூப்பர் ஸ்டார்

தல, தளபதி, சூர்யா, மகேஷ் பாபு, பவன் கல்யான் ரசிகர்களும் சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தைக் கொண்டாடுகிறார்கள்

11:00 (IST)09 Jan 2020





















ச்சும்மா கிழியா இருக்கு

இந்த மாதிரியான படத்துக்கு தான் ரொம்ப வருடங்களாக காத்துக் கொண்டிருந்தோம் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்

10:51 (IST)09 Jan 2020





















படம் வெறித்தனம்

ஏ.ஆர்.முருகதாஸிடம் இருந்து எதிர்பார்க்காத திரைக்கதை அமைப்பு 

10:41 (IST)09 Jan 2020





















அப்பா – மகள் காட்சிகள் ‘ஆஸம்’

தந்தை மகள் இருவருக்குமான அந்த காட்சிகள் நெகிழ்ச்சியாக உள்ளதென இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்

10:12 (IST)09 Jan 2020





















ஸ்வீட் சர்ப்ரைஸ்

தர்பார் FDFS பார்க்கும் ரசிகர்களுக்கு லாட்டே இந்தியாவின் ஸ்வீட் சர்ப்ரைஸ்

10:08 (IST)09 Jan 2020





















அல்டிமேட் தர்பார்

தர்பார் படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், குறிப்பாக செகண்ட் ஹாஃப் சூப்பர் எனவும் தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்

09:35 (IST)09 Jan 2020





















ஹவுஸ் ஃபுல் தர்பார்

தமிழகத்தின் பல திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் ஹவுஸ் ஃபுல் காட்சி

09:23 (IST)09 Jan 2020





















செளந்தர்யா ரஜினிகாந்தின் தர்பார் கொண்டாட்டம்

”என்னோட இந்த நாள் இப்படித்தான் தொடங்கியிருக்கு” என ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா தெரிவித்துள்ளார். 

09:19 (IST)09 Jan 2020





















தர்பார் இசையமைப்பாளர் அனிருத்

ரோகிணி தியேட்டரில் தர்பார் திரைப்படம் பார்க்க வந்திருந்த தர்பார் இசையமைப்பாளர் அனிருத்

09:05 (IST)09 Jan 2020





















ரகிகர்களின் வேற லெவல் கொண்டாட்டம்

சென்னை ரோகிணி திரையரங்கில் தர்பார் திரைப்படத்தின் ரிலீஸையொட்டி, ரசிகர்களின் கொண்டாட்டம் 

08:48 (IST)09 Jan 2020





















தர்பார் கொண்டாட்டம்

தர்பார் கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்

08:37 (IST)09 Jan 2020





















சிவாஜிக்கு அப்புறம் தர்பார் தான்

சிவாஜி திரைப்படத்துக்குப் பிறகு ரஜினிக்கு சிறந்த கமர்ஷியல் படமாக தர்பார் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 

08:20 (IST)09 Jan 2020





















தளபதி ரசிகர்கள் வாழ்த்து

தலைவர் படத்துக்கு வாழ்த்து சொல்லும் தளபதி ரசிகர்கள்

08:12 (IST)09 Jan 2020





















இது தர்பார் தீபாவளியும் கூட

தர்பார் பொங்கலை ‘தர்பார் தீபாவளியாக’ ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி

08:10 (IST)09 Jan 2020





















பிரமாண்ட கட் அவுட்

தர்பார் வெளியீட்டை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் வைத்திருக்கும் பிரமாண்ட கட் அவுட்

08:05 (IST)09 Jan 2020





















ரசிகர்களுடன் தர்பாரை கொண்டாடிய ரஜினி குடும்பத்தார்

தர்பார் படத்தின் சிறப்புக் காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. அங்கு ரஜினிகாந்தின் குடும்பத்தினரும், ராகவா லாரன்ஸ், அதர்வா உள்ளிட்ட திரை பிரபலங்களும் வருகை புரிந்து தர்பார் படத்தைப் பார்த்தனர். 

07:50 (IST)09 Jan 2020





















திருவிழா கோலம் பூண்ட திரையரங்குகள்

சாதாரண நாட்களில் ரஜினி திரைப்படம் வெளியானால் கூட அந்த நாளை திருவிழாவாக மாற்றி விடுவார்கள் ரஜினி ரசிகர்கள், ஆனால் தர்பார் திரைப்படமோ பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. சும்மா விட்டுவிடுவார்களா? தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். பல பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியாக படத்தைப் பார்த்திருக்கிறார்கள். 

Darbar Release: இதுவரை இல்லாத அளவுக்கு, தர்பார் திரைப்படம் சென்னையில் மட்டும் 650 ஷோக்கள் திரையிடப்படுவதாக கூறப்படுகிறது. இதில், 400க்கும் அதிகமான ஷோக்களுக்கு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால், சென்னை நகரில் மட்டும் முதல் நாளில் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.லைகா தயாரித்திருக்கும் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 7000 ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Darbar review rajinikanth darbar tamil movie release review ratings live

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com