Darbar Satellite Rights acquired by Sun TV : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம்பொங்கல் 2020 -ல் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
இந்தப் படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை வழக்கம் போல் பெரும் தொகைக்கு சன் டிவி வாங்கியுள்ளது. உலகளாவிய விநியோக உரிமைகளும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னர் வெளியான, தர்பார் படத்தின் ட்ரைலர் இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஆதித்யா அருணாச்சலமாக போலீஸ் கதாபாத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், பிரதீக் பப்பர் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும், இப்படத்தின் பாடல்களும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடன் வரவேற்பைப் பெற்றன. பொங்கல் விடுமுறைக்கு ஒரு வாரம் முன்னதாக அதாவது ஜனவரி 9-ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…