நடிகர் ரஜினிகாந்த ’தர்பார்’ படப்பிடிப்பில் தற்போது மும்பையில் இருக்கிறார்.
இவர் தன்னுடைய பேரன் (செளந்தர்யாவின் மகன்) வேத் கிருஷ்ணாவுடன் நேரம் செலவழிக்கும் படத்தை, தர்பார் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
”பேரனுடன் ரஜினி சார். என்னுடைய ஃபோனில் இருக்கும் கேண்டிட் படம் இது மட்டும் தான். அவர்கள் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்” எனக் குறிப்பிட்டு, அந்த படத்தைப் பகிர்ந்துள்ளார் சிவன்.
Rajini Sir with his grandson – the only candid pics on my i phone ???? they were watching the monitor ???? pic.twitter.com/XMyWV4Uh6R
— SantoshSivanASC. ISC (@santoshsivan) 8 June 2019
ரஜினியும் சந்தோஷ் சிவனும் 1991-ல் தளபதி படத்தில் வேலை செய்திருந்தார்கள். தற்போது 27 வருடம் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், 25 வருடம் கழித்து மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை ’லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
தர்பார் படம் 2020 பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.