கலெக்‌ஷனில் தட்டித் தூக்கிய தர்பார்: புதுசா ரெக்கார்ட் இருந்தா கொண்டு வாங்கப்பா...

Darbar Box Office Collection: முன்னெப்போதும் இல்லாத சாதனை வசூல். ஒரு தமிழ் படம் இந்த இலக்கை எட்டுகிறது என்றால், சூப்பர் ஸ்டாரால் நிகழ்கிற அதிசயம்...

Darbar Tamil Movie Box Office Collection Day 3: தர்பார் திரைப்பட பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் பிரமிப்பூட்டுகிறது. முந்தைய கலெக்‌ஷன் ரெக்கார்டுகள் அத்தனையையும் முறியடிப்பதாக இங்கு கூறுகிறார், சினிமா விமர்சகர் திராவிட ஜீவா.

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

தர்பார் திரைப்படத்தின் 3-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் குறித்து சினிமா விமர்சகர் திராவிட ஜீவா இங்கு எழுதுகிறார்…

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

‘மூன்றாவது நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 89 கோடியை வசூலித்திருக்கிறது தர்பார். உலகம் முழுவதும் 264 கோடியையும் வசூலித்து பாக்ஸ் ஆபீஸை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு பேட்டி அளித்தார். அதில், ‘கபாலி படத்தின் அமெரிக்க உரிமை 8.5 கோடிக்கு வியாபாரம் ஆனது. இது மற்ற நடிகர்களின் வியாபாரத்தை விட மூன்று மடங்கு அதிகம்’ என்றார். அதன் பின்னர் அதே 2016 ஜுலை 26 ம்தேதி, ‘கபாலி படத்தின் வசூல் 320 கோடி’ என்று அறிவித்தார்.

இதுவரை ஒரு படத்தின் தயாரிப்பாளர் படத்தின் வசூல் நிலவரங்களை இப்படி வெளிப்படையாக பேசிய வரலாறு இல்லை. அதன் பிறகு 2018 அக்டோபரில் வெளியான 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனம் அப்படம் 500 கோடியை வசூலித்தது என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இரண்டும் ரஜினி படம் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஓன்று. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றிருக்கிறது தர்பார்.

சமீப காலமாக ரஜினி படங்களுக்கு வரும் அரசியல் எதிர்ப்புகள், திரையுலகில் தொடர்ந்து 40 வருடங்களுக்கு மேலாக வசூல் சக்ரவர்த்தியாக அசைக்க முடியாத நிலையில் இருப்பதால் திரையுலக போட்டியாளர்களின் எதிர்ப்பு, சமூக வலைத்தளங்களில் இனம், மொழி ரீதியான எதிர்ப்பு என்று பல்வேறு இன்னல்களை அவர் எதிர்கொள்கிறார். இதனால் ரஜினியின் திரை செல்வாக்கு குறைந்து விட்ட தோற்றம் இருப்பது போல் தோன்றியது.

ஆனால் ரஜினியின் ரசிகர்கள் தொடர்ந்து அவரை மனச்சோர்விலிருந்து மீட்கும் மருந்தாகவே இருக்கின்றார்கள். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவரை விட்டுக்கொடுக்காமல் தூக்கி வைத்து கொண்டாடுவது என்பது அவரது பாணியில் சொன்னால் அதிசயம் அற்புதம். அதுபோன்ற ஒரு அற்புதத்தை மிகப்பெரிய ஒப்பனிங் மூலம் தர்பாரிலும் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரஜினியின் முந்தைய படமான பேட்ட, கடந்த ஆண்டின் நம்பர் ஒன் வசூல் சாதனை படம். எனினும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கலெக்‌ஷனை வெளியிடவில்லை. அதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம். அதற்கெல்லாம் சேர்த்து தர்பார் பட வெற்றியை ரஜினியும் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள், ஓவர்சீஸ் என்று எல்லா பேட்டைக்கும் தர்பார் தான் லார்டு என்று நிரூபித்திருக்கிறார் ரஜினி. தமிழகத்தில் முதல் நாள் வசூல் 34.06 கோடி, இரண்டாவது நாள் 25 கோடி, மூன்றாவது நாளில் 31.11 கோடி என மொத்தம் 90 கோடியை தமிழகத்தில் மட்டும் தர்பார் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் கபாலி படத்திற்கு பிறகு 4 நாளில் 100 கோடியை எட்டும் படமாக தர்பார் சாதனை படைக்கிறது. கபாலிக்கு அடுத்து 2.0 படம், ஐந்தாவது நாளில் 100 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஆந்திராவில் முதல்நாள் வசூல் 11 கோடி, இரண்டாவது நாள் 5.3கோடி, மூன்றாவது நாள் 5.9 கோடி என மொத்தம் 23 கோடி வசூலித்திருக்கிறது. கர்நாடகாவில் மூன்று நாட்கள் வசூல் 12.87 கோடி, கேரளாவில் மூன்று நாள் வசூல் 4.9 கோடி, வட இந்தியாவில் தமிழ் வெர்ஷன் ஒட்டுமொத்தமாக 3.9 கோடி, ஹிந்தி வெர்ஷன் மூன்று நாட்கள் 28 கோடி குவித்திருக்கிறது.

மொத்தத்தில் இந்திய அளவில் மூன்று நாட்களில் 160 கோடி குவித்திருக்கிறது தர்பார். ஓவர்சீஸ் ஏரியாவில் மலேசியா-சிங்கப்பூர், இலங்கையில் 13.70 கோடி, ஐரோப்பிய நாடுகளில் 19 .53 கோடி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய மதிப்பின்படி 9.6 கோடி வசூல் ஆகியிருக்கிறது. மற்ற இடங்களில் சேர்த்து ஒட்டுமொத்தமாக தர்பார் படம் சற்றேறக்குறைய 250 கோடியை நெருங்குகிறது. இது முன்னெப்போதும் இல்லாத சாதனை வசூல். ஒரு தமிழ் படம் இந்த இலக்கை எட்டுகிறது என்றால், சூப்பர் ஸ்டாரால் நிகழ்கிற அதிசயம் தவிர வேறில்லை.’

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close