Darbar Movie Trailer: ‘சர்கார்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தர்பார் படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தர்பார் ட்ரைலர் இன்று வெளியானது.

தர்பார் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐ அம் அ பேட் காப்… தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றென்றைக்கும் மாஸ் ஸ்டைல் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் ரஜினியின் தர்பார் பட டிரெய்லரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாவ் சூப்பர்ஸ்டார் என்று ஹேஷ் டேக் பதிவிட்டுள்ளார்.
தர்பார் டிரெய்லர் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்: தலைவா என்ன ஒரு ரஜினிஃபைட் டிரெய்லர்; இன்னொரு தலைவர் பொங்கலுக்காக காத்திருக்கிறோம் என்று டுவிட் செய்துள்ளார்.
தர்பார் டிரெய்லர் குறித்து நடிகை அதுல்யா ரவி: தர்பார் டிரெய்லர்; சார் நீங்க வேற லெவல்… ஒரிஜினலாவே நான் வில்லன். ஐ அம் பேட் காப் வசனத்துக்கு தியேட்டர்ல சும்மா கிழிதான் என டுவிட் செய்துள்ளார்.
ரஜினியின் தர்பார் டிரெய்லர் வெளியானது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், தலைவா… மைண்ட் புளோயிங் மரண மாஸ்… டிரெய்லர பார்த்தாலே சும்மா அதிருதில்ல.. லவ்யூ தலைவா என்று டுவிட் செய்துள்ளார்.
ரஜினியின் தர்பார் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இது நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மாஸ்… பொங்கலோ பொங்கலுக்கு கிழிக்கிறோம் என்று டுவிட் செய்துள்ளார்.
ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து தர்பார் பாடலாசிரியர் விவேக் இங்கே ஸ்டைல் சாம்ராட் என்று புகழ்ந்து டுவிட் செய்துள்ளார்.
ரஜினியின் தர்பார் பட கதாநாயகி நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில், காத்திருப்பு இறுதியாக முடிந்தது.. தர்பார் டிரெய்லரைப் பார்த்து கொண்டாடுங்கள் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தர்பார் ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்</p>
மாஸாக வெளியான தர்பார் ட்ரைலர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் மாஸாக வெளியாகியுள்ளது தர்பார் ட்ரைலர்
தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு வருகை புரிந்த ரஜினிகாந்த்.
சொன்ன நேரத்தில் தர்பார் ட்ரைலர் வெளியாகாததால், செல்ல கோபத்தில் ரசிகர்கள்
இன்னும் சில நிமிடங்களில் தர்பார் ட்ரைலர் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
மணி 6.30-ஐ கடந்தும் இன்னும் தர்பார் ட்ரைலர் வெளியாகாததால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு வானை தொட்டுருக்கிறது.
தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
தர்பார் ட்ரைலர் வெளியீட்டை கொண்டாட கேக்குடன் தயாராகியிருக்கும் ரஜினி ரசிகர்கள்
பொங்கலுக்கு வெளியாகும் தர்பார் படத்தின் வட இந்திய வெளியீட்டு உரிமத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது.
தர்பார் படத்தின் புரோமோஷன் பணியில் ரஜினி ரசிகர்கள்
தர்பார் ட்ரைலர் வெளியீட்டை முன்னிட்டு #DarbarTrailerFromToday என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தர்பாரின் தமிழ், தெலுங்கு ட்ரைலர் லைகா புரொடக்ஷனின் யூ ட்யூப் பக்கத்திலும், இந்தி ட்ரைலர் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் யூ-ட்யூப் சேனலிலும் வெளியாகிறது.
பாளையங்கோட்டையிலுள்ள ஸ்ரீ சக்திவேல் திரையரங்கில், காளிதாஸ் பட இடைவெளியின் போது 7.30-க்கு தர்பார் ட்ரைலர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்பார் படத்தின் புதிய போஸ்டர்
தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்காக மும்பை சென்றடைந்தார் ரஜினி
இன்று மாலை 6.30 மணிக்கு தர்பார் ட்ரைலர் வெளியாகிறது. இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.