தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுகு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக மகிழ்ச்சியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் பாஸிட்டிவ் கம்மெண்ட் செய்து வரவேற்றுள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளின் திவ்யதர்ஷினி என்கிற டிடி, தனது டிடி வித் காஃபி நிகழ்ச்சியில் தனது க்யூட்டான் சிரிப்பு மூலம் எண்ணற்ற ரசிகர்களை ஈர்த்தவர். டிவி விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
டிவியில் மட்டுமல்லாமல், டிடி நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமான டிடி கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விரைவிலேயே இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஒரு ஆண் விவாகரத்து ஆனாலோ அல்லது மனைவி இறந்துவிட்டாலோ அடுத்த திருமணத்துக்கு தயாராகி புதுமாப்பிள்ளையாகி விடுகிறார்கள். ஆனால், ஒரு பெண் விவாகரத்து ஆனாலோ அல்லது கணவன் இறந்துவிட்டாலோ பழைய காலத்து கைம்பெண் வாழ்க்கை முறையை அனுபவிக்க வில்லை என்றாலும், பெண் வாழாவெட்டி என்ற அவச்சொற்களை எதிகொள்ள வேண்டிய நிலையில்தான் இன்னும் சமூகம் அப்படியே உள்ளது.
இந்த பழமைகளை மீறும் வகையில் பெண்கள் தங்கள் திறமையால் உழைப்பால் சமூகத்தை நவீனத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற டிடி, அங்கே கலர்ஃபுல் பிகினியில், நீச்சல் குளத்தில் காலை டிஃபன் சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டு கொண்டாடினார்.
இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் விதமாக டிடி இன்று உற்சாகமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காகிதத்தில் நான் 36 பிளஸ் சிங்கிள், 36 பிளஸ் வயது விவாகரத்து ஆனவள், இன்னும் குழந்தை இல்லை. 36 பிளஸ் மூட்டு வீக்கம் உள்ளது. ஆனாலும், 36 பிளஸ் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால், எல்லோருடையா வாழ்க்கையும் வித்தியாசமானது. அதனால், மகிழ்ச்சியை தேர்வு செய்யுங்கள் என்று இறுதியாக மகளிர் தின வாழ்த்துகள் எழுத்துகளை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இந்த வீடியொவுக்கு நிவேதா பெத்துராஜ் இது ரொம்ப நல்லா இருக்கு… ஐலவ் யூ என்று கம்மெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவை 1 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
தற்போது 35 வயதாகும் டிடிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். டிடியும் பெங்களூருவைச் சேர்ந்த ஏற்கெனவே விவாகரத்தான 42 வயதான தொழிலதிபரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். இந்த சூழலில், சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக டிடி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.