Advertisment
Presenting Partner
Desktop GIF

நீச்சல் குளம்... கலர்ஃபுல் பிகினி... காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ

மாலத்தீவில் டிடி கலர்ஃபுல் பிகினியில் நீச்சல் குளத்தில் காலை உணவு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
dd neelakandan, dd in maldives, dd bikini video, டிடி, பிகினி, டிடி பிகினி, மாலத்திவு, டிடி வீடியோ.

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற டிடி கடற்கரையில் கலர்ஃபுல் பிகினி உடை, நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டே காலை உணவு என்று கொண்டாட்டமான வீடியோ வெளியிட்டுள்ளார். டிடியின் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

காஃபி ஃபித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் பல சினிமா பிரபலங்களை நேர்காணல் செய்து புகழ்பெற்றவர் திவ்யதர்ஷினி நீலகண்டன். பிரபலங்களின் நேர்காணல்களைப் பார்பதோடு டிடியைப் பார்ப்பதற்காகவே பலரும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். ரசிகர்கள் அனைவரும் அவரை செல்லமாக டிடி என்று அழைக்கின்றனர்.

மாலத்தீவு பிரபலங்களின் சுற்றுலா இடமாக உள்ளது. நடிகை ரகுல் ப்ரீத் அண்மையில் மாலத்தீவு சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிட்டார். அந்த வரிசையில், மாலத்தீவு சென்ற டிடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். டிடி கடற்கரையில் கலர்ஃபுல் பிகினியில் மாலை நேரச் சூரியனை ரசித்து மகிழ்ந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதோடு, தான் தங்கியிருந்த ஹோட்டலில் நீச்சல் குளத்தில் குளித்தபடி ஹோட்டல் ஊழியர்கள் கொண்டுவந்த காலை உணவை சாப்பிட்டுக்கொண்டு குளிக்கிறார்.

வெளியிட்டுள்ள வீடியோவில் நீச்சல் குளத்தில் இருக்கும் டிடி, “எங்க அம்மா குளிச்சுட்டுதான் சாப்பிடனும்னு சொன்னாங்க... அதனால நான் குளிச்சுகிட்டே சாப்பிடறேன்” என்று ஜாலியாக ஹோட்டல் ஊழியர்களுன் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார். அதோடு மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு டிப்ஸ்களையும் சொல்கிறார். மாலத்தீவில் டிடி கலர்ஃபுல் பிகினியில் நீச்சல் குளத்தில் காலை உணவு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Dd Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment