முதல்முறையாக ஆழ்கடலில் திருமணம் செய்த இளம் ஜோடி: தமிழக தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து
தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்கள் திருமணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர். புதுமண ஜோடிக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்கள் திருமணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர். ஆழ்கடலில் திருமணம் செய்த புதுமணத் தம்பதிக்கு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Advertisment
வாழ்க்கையில் அனைவருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு. வாழ்வின் மிக முக்கியமான திருமணத்தை தனக்கு பிடித்தவருடன் ஆடம்பறமாக வித்தியாசமாக நடபெற வேண்டும் என்பது பொதுவான விருப்பமாக இருக்கிறது. விமானத்தில் பறந்தபடி திருமணம், உயரமான மலை சிகரத்தில் திருமணம் என்று பல வித்தியாசமான முறையில் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், மிகவும் வித்தியாசமான முறையில் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக்தைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி ஆழ்கடலில் திருமணம் செய்துள்ளனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை என்ற இளைஞர். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கோவையைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஏற்கெனவே, ஆழகடல் நீச்சல் பயிற்சி பெற்றுவந்த சின்னதுரை தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழகடலில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். இதனை, சின்னதுரை புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த்தை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். அரவிந்த்தின் உதவியுடன் ஆழ்கடலில் நீந்துவதற்கான பாதுகாப்பு உபகரணங்களின் பாதுகாப்புடன் சின்னதுரை - ஸ்வேதா திருமணம் சென்னை நீலாங்கரை கடலில் 60 அடி ஆழத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. கடலின் அடியில் அலங்காரம் செய்யப்பட்ட வளைவுக்குள் சின்னதுரை - ஸ்வேதா கழுத்தில் மங்கல நாண் அணிவித்தார். பின்னர், இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.
ஆழகடலில் நடைபெற்ற இந்த திருமணத்துக்கு ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் செய்திருந்தார். இதன் மூலம், இந்த திருமணம்தான் இந்தியாவில் ஆழ்கடலில் இந்து முறைப்படி நடைபெற்ற முதல் திருமணம் என்ற புகழைப் பெற்றுள்ளது. அதிலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துள்ளனர் என்பது நெட்டிசன்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், ஆழ்கடலில் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து கூறி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"