விஜய் தொலைக்காட்சி, அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் சின்னத்திரை நடிகர்களை கௌரவிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி மூலம் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 6ஆவது விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
Favourite Mother பிரிவில் விருது வழங்கியபோது தான் ஒட்டுமொத்த அரங்கமும் கண்ணீர் விட்டது. அதற்கு காரணம் தீபா தான். பல காலமாக சினிமா துறையில் இருந்து வந்தாலும் தீபாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் அன்புடன் குஷி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வந்தார் தீபா. இயல்பாகவே திறமையான நடிகையான தீபா, தனது வெள்ளந்தியான பேச்சினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதற்காக அவர் Favourite Mother பிரிவில் நாமினேட் ஆகி இருந்தார்.
இந்த வருடத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. மொத்தம் ஐந்து பேர் இந்த பிரிவில் நாமினேட் ஆகி இருந்தார்கள்.
சீதா லக்ஷ்மி - சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சுசித்ரா - பாக்கியலட்சுமி
தீபா - அன்புடன் குஷி
சாந்தி வில்லியம்ஸ் - செந்தூர பூவே
ஷீலா - பாண்டியன் ஸ்டோர்ஸ்
இறுதியில் விருது பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ராவுக்கு வழங்கப்பட்டது.
"அப்போ எனக்கு விருது இல்லையா" என தீபா தனக்கு விருது தராதது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசினார். மேலும் கண்ணீர் மல்க பேசிய அவர் தனக்கு விருது வழங்கப்பட்டால், தனது தாயின் புகைப்படத்தை காட்டலாம் என்று நினைத்து இருந்ததாகவும், தனக்கு விருது கிடைக்காமல் ஓய போவதில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எங்க ஊரில் பொதுவாக பெண் பிள்ளைகளை நடிக்க விடமாட்டார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்து சீரியலில் நடித்தபோது அப்பா என்னை அடி அடி என அடித்துவிட்டார். ஆனால் ஒரு அடி கூட என் மீது விழவில்லை. அம்மா தாங்கிக்கொண்டார். இன்று எனக்கு விருது தருவார்கள், என் அம்மாவை பற்றி பேசலாம் என எண்ணி தான் வந்தேன். இந்த பெரிய ஸ்கிரீனில் அம்மா போட்டோவை போடலாம் என எண்ணி வந்தேன். ஆனால் அது ஏமாற்றமாக முடிந்துவிட்டது.
"என் அம்மா தற்போது உயிருடன் இல்லை. சாகும் வரை எனக்காக மட்டுமே வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் அவர். அம்மாவுடன் நான் அதிகம் சண்டையிடுவேன். மற்றவர்கள் என்னை பற்றி தவறாக எதாவது சொன்னால், நான் நேராக சென்று அம்மாவிடம் 'எதற்கு என்னை பெத்தே.. அதனால் தான் இப்படி பேசுறாங்க' என சண்டை போடுவேன். அவர் இறந்தபிறகு தான் அவர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் என்பது புரிகிறது.எனக்கு வீட்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார், தாலிக்கொடி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதெல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. இன்று வரும்போது கூட எனக்காக கஷ்டப்பட்ட என் அம்மா முகத்தை இந்த திரையில் காட்டிவிடவேண்டும் என்பதற்காக தான் போனில் என் அம்மா போட்டோவை எடுத்து வைத்து கொண்டு வந்தேன்" என கலக்கமாக பேசினார்.
இதை கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் கண்ணீர் விட்டது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தேவையில்லாதவர்களுக்கு எல்லாம் விருது கொடுப்பீங்க இவங்களுக்கு கொடுத்தா என்ன என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.