Deepa Venkat: சினிமா / சீரியல் நடிகை, ஆர்.ஜே, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல திறமைகளைக் கொண்டிருப்பவர் தீபா வெங்கட். அரவிந்த்சாமி, ரேவதி நடித்த பாசமலர்கள் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் தீபா.
Advertisment
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
திரைப்படங்களில் / சீரியல்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவர் முன்னணி எஃப்.எம்மில் 9 ஆண்டுகளாக ஆர்.ஜே-வாகவும் வேலை பார்த்து வந்தார். எல்லாவற்றையும் விட, முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியும் வருகிறார். அதிலும் நயன்தாராவின் செகண்ட் இன்னிங்ஸில் அவரது திரை வாழ்க்கையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. போல்டான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு போல்டான குரலாக தீபா வெங்கட்டின் குரல் கச்சிதமாகப் பொருந்திப் போனது.
தீபா வெங்கட்
படிப்புக்குப் பாதிப்பு இல்லாமல் ஸ்கூல், டப்பிங், ஆக்டிங்னு பரபரப்பா இயங்கியிருக்கிறார் தீபா. ரெகுலர் காலேஜ் படிக்கவும் நேரம் இல்லாமல், கரஸில் யூஜி, பிஜி கோர்ஸ் முடித்திருக்கிறார். அப்படி முதல் வருஷம் படிக்கும் போது தான், 'அப்பு' படத்தில் தேவயானிக்கு டப்பிங் பேச வாய்ப்பு வந்திருக்கிறது. அதுதான் ஹீரோயினுக்காக அவர் பேசிய முதல் டப்பிங்.
அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க, நிறைய நடிகைகளுக்கு குரல் கொடுக்க வரிசையாக வாய்ப்பு வந்திருக்கிறது. 'தில்', 'ஆனந்தம்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஏழுமலை', 'வாரணம் ஆயிரம்', 'வெடி', 'மயக்கம் என்ன', 'தெய்வத்திருமகள்', 'ருத்ரமாதேவி', ’செக்க சிவந்த வானம்’ என தீபா பேசிய படங்களின் எண்ணிக்கை நீள்கிறது. சினேகா, சிம்ரன், அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஹீரோயின்களுக்கு தான் இவர் அதிகமாக குரல் கொடுத்திருக்கிறார்.
ஐ.டி-யில் வேலை செய்யும் கணவர், 2 குழந்தைகள் என குடும்பத்துடன் நேரம் செலவிடுவது தான் தீபாவுக்கு ரொம்ப பிடித்தமான ஒன்றாம்.