”சுய நினைவை இழந்த அந்த நாள்…” மனச்சோர்வுடனான தீபிகா படுகோனின் போராட்டம்

Deepika Padukone Blog: விமான நிலையத்தில் உடைந்து அழுததாகவும் தீபிகா தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

By: December 6, 2019, 2:40:19 PM

Deepika Padukone : பாலிவுட்டின் திறமையான நடிகைகளில் தீபிகா படுகோனே குறிப்பிடத் தகுந்தவர். தீவிர முயற்சியாலும், கடின உழைப்பாலும், இந்த நடிகை பாலிவுட்டில் வெகுதூரம் சென்று, தன்னை முன்னணி நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டார். அவரது திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வழங்கி, மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார்.

இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டார் தீபிகா. அதைப் பற்றி பல நேர்காணல்களிலும் பேசியுள்ளார். அதோடு சமீபத்தில், அவர் தனது பிளாக்கில், மன அழுத்தத்துடன் தான் போராடியதைப் பற்றி, வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தின் அறிகுறிகளை தான் அனுபவிக்கத் தொடங்கியதாகவும், பிப்ரவரி மாதத்தின் மத்தியில், கடினமாக வேலை செய்த அந்த நாளுக்குப் பிறகு தான் சுயநினைவை இழந்ததாகவும் தீபிகா அதில் கூறியுள்ளார்.

அடுத்த நாள் காலையில் எழும் போது, வெற்று உணர்வையும், வெறித்தனமான அழுகையுமே தீபிகாவிடம் மிஞ்சியதாம். அந்த நேரத்தில் அவர் ரன்வீர் சிங்குடன் காதலில் இருந்தார். நான்கு மறக்கமுடியாத திரைப்படங்களில் நடித்தார். அவரது குடும்பம் ஆதரவாக இருந்தது, ஆனாலும் தீபிகாவுக்குள் ஏதோ ஒரு வெற்றுணர்வு இருந்துக் கொண்டே இருந்ததாம்.

தீபிகா எல்லா நேரத்திலும் சோர்வாகவும் சோகமாகவும் இருப்பாராம். அவரது பெற்றோர் முன் துணிச்சலாக இருப்பதைப் போல் காட்டிக் கொள்வாராம். அதனால் தீபிகாவுக்கு என்ன பிரச்னை என அவர்களும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், தனது பெற்றோர் தன்னைப் பார்த்து விட்டு திரும்பும்போது, விமான நிலையத்தில் உடைந்து அழுததாகவும் தீபிகா தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். வேலையில் அல்லது ரன்வீருடன் ஏதாவது பிரச்னையா என அவரது அம்மாவும் அப்பாவும் கேட்டார்களாம். அதோடு உனக்கு ப்ரபஷனல் உதவி நிச்சயம் வேண்டும் என தீபிகாவின் அம்மா கூறினாராம்.

மனச்சோர்வுக்கு எதிராக அவ்வப்போது பேசி வரும் தீபிகாவின் இந்த வலைப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Deepika padukone battle with depression blog

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X