/indian-express-tamil/media/media_files/2025/09/18/kalki-deepika-2025-09-18-14-37-14.jpg)
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பான் இந்தியா படமாக பெரிய வசூல் சாதனை படைத்த கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் முக்கிய கேக்டரில் நடித்திருந்த நடிகை தீபிகா படுகோன், இந்த படத்தின் 2-ம் பாகத்தில் இருந்து நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் உலகளவில் ரூ1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தனர், இந்த படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தின் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை தீபிகா படுகோன், கிருஷ்ணரை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தார், இவரை காப்பாற்ற தான் அமிதாப் பச்சன் சாகாவரம் பெற்று வாழ்ந்து வருவார். இதனிடையே, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், கல்கி படத்தில் சுமதி கேரக்டரில் நடித்த தீபிகா அந்த கேரக்டரில் மீண்டும் நடிக்க மாட்டார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'சில கடமைகளை' நிறைவேற்றுவது தொடர்பாக அவரைால் ஒரு தீர்கமாக ஒப்பந்தத்திற்கு வர முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது,
மேலும் இந்த படத்திற்காக, அதிக நேரத்தை அர்ப்பணிக்கக்கூடிய ஒருவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றும் வைஜெயந்தி மூவிஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' திரைப்படத்திலும் தீபிகா நடிக்க மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகின. அப்போது, ஒரு தாயாக தனது புதிய பொறுப்புகளின் காரணமாக சில கோரிக்கைகளை அவர் முன்வைத்ததாகக் கூறப்பட்டது.
கர்ப்பமாக இருந்தபோதே தீபிகா 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் சில காட்சிகளில் நடித்தார். அப்போது, அவரது கணவர் ரன்வீர் சிங், இந்தப் படம் தங்கள் குழந்தையின் அறிமுகம் என நகைச்சுவையாகக் கூறியிருந்தார். 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் ரூ700 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்டது. இது உலகளவில் ரூ1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, பிரபாஸுக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெற்றியைப் பெற்றுத் தந்தது.
This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD.
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 18, 2025
After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership.
And a film like…
தீபிகா படுகோன் கடந்த சில ஆண்டுகளாக தனி ஒரு வெற்றிப் படத்தை கொடுக்கவில்லை என்றாலும், 'பதான்' மற்றும் 'ஜவான்' போன்ற வெற்றிப் படங்களில் ஷாருக் கானுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கானுடன் 'கிங்' என்ற புதிய படத்திலும் அவர் இணைந்து நடிக்கிறார்.
ஹார்ப்பர் பஜார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சத்தம் அதிகமாக இருக்கும்போது அதைத் தவிர்த்து, தன்னுடன் ஒத்துப்போகும் நபர்களுடன் மட்டுமே பணியாற்ற விரும்புவதாகத் தீபிகா கூறினார். "என் உள்ளுணர்வுக்கு எது சரியாக தோன்றுகிறதோ, அதைக் கேட்கிறேன். சொல்வது எளிது, ஆனால் செய்வது கடினம். உங்களைச் சுற்றியுள்ள சத்தத்தை நிறுத்திவிட்டு, உங்கள் உள்ளுணர்வைக் கேட்டால், அதற்கான பதில்கள் எப்போதும் கிடைக்கும் என நம்புகிறேன்.
நான் சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள், எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் நபர்களாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருப்பது, உண்மையாக இருப்பது ஆகியவற்றின் மூலம் நான் சமநிலையைக் கண்டறிகிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.