Advertisment

தேர்தலில் வாக்களித்த பாலிவுட்டின் ஸ்டார் ஜோடி; கர்ப்பினி தீபிகா படுகோனுக்கு கேடயமாக மாறிய ரன்வீர்

தங்கள் முதல் குழந்தை பிறக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் மும்பையில் வாக்களிக்க வந்தபோது, ​​அவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளில் காணப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Deepika Padukone Ranveer

விரைவில் அப்பா அம்மாவாக இருக்கும் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் மும்பையில் வாக்களிக்க வந்தனர். (Photos: Varinder Chawla)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தங்கள் முதல் குழந்தை பிறக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் மும்பையில் வாக்களிக்க வந்தபோது, ​​அவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளில் காணப்பட்டனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Deepika Padukone holds her baby bump, refuses to let go of Ranveer Singh’s hand as they cast vote in Mumbai Lok Sabha polls

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், 5-வது கட்ட மக்களவைத் தேர்தலின் போது மும்பை பாலி ஹில்லில் வாக்களித்தனர். கடும் வெயிலில் வாக்களிக்க வெளியே வந்தபோது, இந்த ​​ஜோடி வெள்ளை சட்டை மற்றும் கருப்பு சன்கிளாஸ்களில் ஜோடியாக இருந்தனர். வாக்குச் சாவடிக்கு வெளியே இருக்கும் தீபிகா மற்றும் ரன்வீர் ஆகியோரின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, ரன்வீர் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை கூட்டத்தில் இருந்து பாதுகாக்க கைகளால் தடுத்து கேடயம் போல செயல்பட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். தீபிகா தனது கணவர் ரன்வீரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

பிரபலங்களைப் புகைப்படம் எடுக்கும் ஒரு சுயாதீன புகைப்படக் கலைஞரின் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், கர்ப்பிணியான தீபிகாவை, ரன்வீர்  கூட்டத்திலிருந்தும் மீடியாக்களிடமிருந்தும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் அமர்ந்திருப்பதைக் காணலாம். வீடியோக்களில், பிக்கு நடிகை தீபிகா தனது காரில் கவனமாக அமர்ந்திருக்கும்போது, ​​கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றுப் பகுதியைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மற்றொரு வீடியோவில், ஒரு உற்சாகமான ரன்வீர் அந்த இடத்தை விட்டு வெளியேற சாலையைக் கடக்கும் முன் ஒரு ரசிகரைக் கட்டிப்பிடிப்பதைக் காட்டுகிறது.

5வது கட்ட மக்களவைத் தேர்தலில், நடிகர்கள் தீபிகா மற்றும் ரன்வீர் தவிர, மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷபானா ராசா போன்ற பிரபலங்களும் மும்பையில் வாக்களித்தனர். வாக்களிக்க வெளியே வந்த வித்யா பாலன், “இன்று வாக்களிக்க வந்து வியர்த்து விட்டேன்” என்று கூறினார்.

பிப்ரவரி 29-ல் தீபிகாவும் ரன்வீரும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று கர்ப்பமானதை என்பதை உறுதிப்படுத்தினர். இந்த நட்சத்திர ஜோடி தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அபிமான அறிவிப்பைப் பகிர்ந்து கொண்டனர். குழந்தை இந்த ஆண்டு செப்டம்பரில் வரும் என்று அறிவித்தனர். இந்த ஜோடி நவம்பர் 14, 2018 அன்று இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு 6 ஆண்டுகள் டேட்டிங் செய்தது. சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்து காதலித்தனர். ஃபைண்டிங் ஃபேன்னி, பத்மாவத் மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு பெல்ஜியத்தில் ஐந்தாவது திருமண நாளை கொண்டாடினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Deepika Padukone Ranveer Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment