தீபிகா படுகோனின் ஒரே ஒரு கமெண்டுக்கு, இவ்ளோ அலப்பறையா?

”தீபிகா கர்ப்பமாக இருக்கிறார்” என்று ஒரு ரசிகர் கூற, "அர்ஜுன் உறுதிப்படுத்தியுள்ளார்" என இன்னொருவர் கூற, “ஓ மை காட், ஆவ்சம்” போன்ற கருத்துகள் இன்ஸ்டாகிராமில்...

Deepika Padukone – Ranveer Singh: காதல் திருமணம் செய்துக் கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதிகளைப் பற்றிய சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் வெறித்தனமாக டிரெண்ட் ஆகும். அப்படித்தான் இதுவும்…

சமீபத்தில் தீபிகாவின் காதல் கணவர் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் லைவ் மூலம் அவரது ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தீபிகாவின் வெரிஃபைடு அக்கவுண்டிலிருந்து வெளியான கமெண்ட், ரசிகர்களை தாறுமாறாக யோசிக்க வைத்திருக்கிறது. தீபிகாவின் கமெண்டை முழுமையாக யூகிக்க முடியவில்லை, இருப்பினும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற ஆர்வத்தை அது கிளப்பியது.

விஷயம் இது தான். அந்த லைவ் உரையாடலில், “ஹாய் டாடி” என கமெண்டிட்டிருந்த தீபிகா, கூடவே கை குலுக்கும் எமோஜி, குழந்தை எமோஜி, ஹார்ட் எமோஜி ஆகியவற்றையும் குறிப்பிட்டிருந்தார். தனது நண்பர்களை இன்ஸ்டாகிராமில் ட்ரோல் செய்வதை அதிகமாக விரும்பும் நடிகர் அர்ஜூன் கபூரோ, “அண்ணா, அண்ணி உங்களுக்கு ஒன்றை தர போகிறார்” என்று சொல்லி, ரசிகர்களின் யூகத்திற்கு தீனி போட்டார். ரன்வீரின் அந்த லைவ் வீடியோவில் தீபிகா போட்ட கமெண்டின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், ரசிகர்கள் தங்களது சொந்த கருத்தை ‘அலேக்காக’ செருகி விட்டனர்.


”தீபிகா கர்ப்பமாக இருக்கிறார்” என்று ஒரு ரசிகர் கூற, “அர்ஜுன் உறுதிப்படுத்தியுள்ளார்” என இன்னொருவர் கூற, “ஓ மை காட், ஆவ்சம்” போன்ற கருத்துகள் இன்ஸ்டாகிராமில் கரை புரண்டு ஓடின.

”ரன்வீர் தீபிகாவை பேபி என்று அழைத்தார். அதனால் தான் அவர் ரன்வீரை ‘டாடி’ என்று குறிப்பிட்டுள்ளார். பேபி – டாடி புரிகிறதா?” என சில ரசிகர்கள் விளக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close