Deepika Padukone - Ranveer Singh: பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தற்போது ’83’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்கள்.
Advertisment
இந்தப் படத்தில் ரன்வீரின் ஆன் ஸ்கிரீன் மனைவியாக நடிக்கும் தீபிகா படுகோனே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். சமீபத்தில் 83 படத்தின் நிறைவு விழா பார்ட்டி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜீன்ஸ் மற்றும் வெள்ளை டீ - ஷர்ட்டில் கணவன்-மனைவி இருவரும் வருகை தந்து, நடனமாடி தங்களது குழுவினரை மகிழ்வித்தனர்.
83 பார்ட்டியில் தீபிகா - ரன்வீர் சிங் ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த காதல் தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ’83 படப்பிடிப்பின் பயணத்தைக் கொண்டாட விரும்பிய தீபிகா, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடிதத்தை எழுதி, படக்குழுவினர் அனைவரையும் விருந்துக்கு அழைத்ததாக’ நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரன்வீர் மற்றும் தீபிகா ஏற்கனவே ”ராம் லீலா, பஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் போன்ற திரைப்படங்களில் தங்கள் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியுள்ளார்கள். '83’ திரைப்படமும் அந்த வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1983-ல் இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கோப்பை வென்றதை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், கபில் தேவின் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபிலின் மனைவி ரோமியாக தீபிகா நடித்துள்ளார். இதனை கபீர் கான் இயக்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.