திருமணம் குறித்து மனம் திறந்தார் நடிகை தீபிகா படுகோனே!

தீபிகாவின் குடும்பத்தினர் மும்பை சென்று, ரன்வீரின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்குடன் காதல் மற்றும் திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் சேர்ந்து நடித்திருந்தனர். பெரும் சர்ச்சைக்களுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு, தீபிகா மற்றும் ரன்வீரின் நெருக்கம் அதிகரித்தது.

ஏற்கனவே, இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து தகச்வல் வெளியாகின. இதுப்பற்றி நடிகை திபீகாவிடம் கேட்டதற்கு, ”சினிமாவில் சாதிப்பதற்கு நடிகர்-நடிகைகள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். சொந்த பந்தங்கள், குடும்பங்கள், நண்பர்களை விட்டு அவர்கள் விலகி இருக்க வேண்டும். நானும் அதற்கு தயாராக இருந்ததால்தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வர முடிந்தது. பத்மாவத் போன்ற படங்களில் நடித்தால் இன்னும் நிறைய கஷ்டப்பட வேண்டும்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு திருமணத்தில்தான் முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனக்கும் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் உள்ள உறவு பல கட்டங்களை தாண்டி வலுவாகி இருக்கிறது.அவர் பக்கத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு எதுவும் ஞாபகம் வருவது இல்லை. எங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தீபிகாவிற்கும் ரன்வீருக்கும் இன்னும் மாதங்களில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக தீபிகாவின் குடும்பத்தினர் மும்பை சென்று, ரன்வீரின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் 2 தினங்களில் வெளியாகும் என்று பாலிவுட் வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close