பதான் படத்தில் இணைந்து நடித்த ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் தோல் பராமரிப்பு பொருளான 82°E என்ற க்ரீமை பயன்படுத்தும் வீடியோ காட்சியை தீபகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான பதான் திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், ஷாருக்கான் தீபிகா படுகோனே ஜோடிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் எது செய்தாலும் ரசிகர்கள் வைரலாக்குவதை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஷாருக்கான் தீபிகா படுகோனே இருவரும் ஸ்கின்கேர் பொருளை தோல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பதான் இணை நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே சமீபத்தில் படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வெளிவருவதற்கு முன்பு காலை தோல் பராமரிப்பு வழக்கத்திற்காக ஒன்றாக இணைந்தனர். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள தீபிகா படுகோனே,"இன்று நீங்கள் என்னுடன் தயாராகி வருகிறீர்கள்" என்று சொல்ல நானும் உங்களுடன் தயாராக இருக்க விரும்புகிறேன்" என்று கூறி ஷாருக்கான் உடனடியாக அவருடன் இணைகிறார்.
அதனைத் தொடர்ந்து தீபிகாவின் தோல் பராமரிப்பு பிராண்டான 82°E இன் பல்வேறு தயாரிப்புகளைப் பயன்படுத்தி இரண்டுபேரும் தோல் பராமரிப்பு தொடர்பாக பேசிக்கொள்கின்றனர். இதில் இருவரும் முதலில் தங்கள் முகத்தை க்ளென்சர் மூலம் சுத்தப்படுத்துகிறார்கள், பிறகு தீபிகா ஷாருக்கானிடம் "ஹைட்ரேட்" செய்ய பரிந்துரைத்தார். ‘தண்ணீர்’ என்ற வார்த்தையை அழுத்தி நிறைய தண்ணீர் குடிக்குமாறு ஷாருக்கிடம் தீபிகா கூறுகிறார்.
இது குறித்து, ஷாருக், "நிறைய தண்ணீர் இருக்கும் வரை, நீங்கள் விரும்பும் எதையும் தண்ணீரில் கலக்கலாம்" என்று கிண்டல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தீபிகாவின் தோல் பராமரிப்புப் பொருட்களைப் பாராட்டும் ஷாருக்கான், தனது மகள் சுஹானா கான் ஒரு தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக அவரிடம் கூறுகிறார். இதனிடையே முழு செயல்முறையையும் செய்த பிறகு, தீபிகா கிங் ஷாருக்கானிடம், உங்கள் மனைவி கௌரி கானும் குழந்தைகளும் இந்த வீடியோவைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்று சொல்ல, "நான் வீட்டிற்குச் சென்றால், அவர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள் என ஷாருக்கான் சொல்கிறார்.
தொடர்ந்து வீடியோவில், இந்த அழகான மனிதனுடன் நான் எனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினேன் <@iamsrk > நாங்கள் இப்போது நான்கு திரைப்படங்களை ஒன்றாகச் செய்துள்ளோம் என்பது ரகசியமில்லை! ஆனால் தயாராகி, எங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை ஒன்றாகச் செய்வது ஒரு வேடிக்கையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு ரசிகர், "ஐஎஸ்ஐ முகவர் ஒரு ரா ஏஜெண்டிற்கு தோல் பராமரிப்பு கற்றுக்கொடுக்கிறார் என்றும், இது மிகவும் அழகாக இருக்கிறது என்று ஒருவரும் பதிவிட்டுள்ளனர். மேலும் பல ஷாருக்கான் ரசிகர்கள் அவர் மிகவும் அழகாக இருப்பதைக் கண்டனர், அதேபோல் தீபிகாவின் தயாரிப்புகளுக்கான மார்க்கெட்டிங் உத்தியால் சில ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர், "அவரது தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக அவர் செய்த சிறந்த விளம்பரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தீபிகா படுகோனே மற்றும் ஷாருக்கான் தற்போது பதான் படத்தின் வெற்றியில் மிகழ்ச்சியில் உள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி கிளப்பில் இடம்பிடிக்க உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/