Advertisment

ராஷ்மிகா மந்தனா சர்ச்சை வீடியோ : டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் கைது

தொழில்நுட்பத்தைஇவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால், எனக்கு மட்டுமல்ல பலருக்கும் தீங்கு விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
rashmika Mandana

நடிகை ராஷ்மிகா மந்தனா

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், பலரும் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவறாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவதை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில் அது போலியானது என்று கண்டறியப்பட்டுவிடுகிறது.

Advertisment

இந்த மாதிரியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுபவர்கள் மீது, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுத்தாலும், இந்த மாதிரியான செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், டீப் பேக் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நடிகை ராஷ்மிகா தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ பதிவு உண்மை இல்லை என்று விளக்கம் அளித்திருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது வேதனையை வெளியிட்டிருந்தார். ராஷ்மிகா கறுப்பு உடையில் லிப்டில் நுழைவது போன்று இந்த வீடியோ வெளியாகி இருந்தது. இதன் உண்மையான வீடியோவில், பிரிட்டிஷ்-இந்திய செல்வாக்குமிக்க ஜாரா படேல் இருந்துள்ளார். ஆனால், டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவரின் முகத்திற்கு பதிலாக ராஷ்மிகாவின் முகத்தை வைத்துள்ளனர்.

இது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்த ராஷ்மிகா, தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதால் தனிநபர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை எடுத்துக்காட்டினார். "இதுபோன்று தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால், எனக்கு மட்டுமல்ல பலருக்கும் தீங்கு விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.

Rashmika and Zara

இந்த வீடியோ பதிவு வெளியானதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த டிசம்பர் மாதம், சமூக ஊடக தளங்களைச் சந்தித்து தவறான தகவல்கள் மற்றும் போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடும் நபர்கள் குறித்து மதிப்பாய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில், அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவற்றின் தளங்களில் இருந்து தவறான தகவல்களைக் கண்டறிந்து அவற்றை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து போலி ஆபாச வீடியோ வெளியிட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rashmika Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment