டிமான்டி காலனி 2 இன்று வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் திகில் திரில்லார் திரைப்படம் இது. இப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ஞானமுத்து பட்டறை தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க , இவருடன் இணைந்து தயாரிப்பாளர் விஜய் சுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், முத்துக்குமார், ஷாரா, அருண் பாண்டியன் , முனீஷ்காந்த் ராமதாஸ், ரெடின் கிங்ஸ்லி , மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.