Devarattam Review: தேவராட்டம் படம் எப்படி இருக்கு?

கதாநாயகி மஞ்சிமா மோகன் அழகா இருக்கிறார், அவ்வளவுதான்

கதாநாயகி மஞ்சிமா மோகன் அழகா இருக்கிறார், அவ்வளவுதான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Devarattam gautham karthik

விமர்சனம் - குமரன் பாபு:

அம்மா - மகன் உறவு, தந்தை - மகள் - மருமகன் உறவு, தாத்தா - பேரன் உறவு, அண்ணன் - தங்கை உறவு என வெற்றி ஆட்டம் போட்ட இயக்குனர் முத்தையா, கூட்டம் கூட்டி அக்கா - தம்பி உறவை சொல்ல ஆடியுள்ள ஆட்டம் தான் தேவராட்டம்....

Advertisment

சில கதாபாத்திரங்கள் என்றாலும், அவர்களுக்கேற்ற கதாபாத்திர அமைப்பு, சீன்கள் என துல்லியமாக ஸ்கெட்ச் போட்டு வந்த முத்தையா, இதில் கேட்சை தவறவிட்டுவிட்டுள்ளார்...

கதாநாயகனாக கவுதம் கார்த்திக் வர்றார், போறார், அடிக்கிறார், கொலை பண்றார்...

ஏம்பா, அவரை கொஞ்சம் நடிக்க சொல்லுங்கய்யா ( இன்றளவும் நடிப்பில் தனி மேனரிசத்தை காட்டும் நடிகர் கார்த்திக்கின் புதல்வர்தான் இவர்...)

கதாநாயகி மஞ்சிமா மோகன் அழகா இருக்கிறார், அவ்வளவுதான்

Advertisment
Advertisements

முத்தையா படம் என்றாலே, இடத்திற்கு தகுந்தமாதிரி வசனங்களும் பளிச்சிடும், இந்த படத்தில் அதுவும் மிஸ்ஸிங்....

நல்லவனும், நல்லவனா இருக்குறவனும் இங்கே வாழமுடியாது...

நாட்டில நடக்குறதெல்லாம் தட்டிக்கேட்கணும்னு நெனச்சான்னா, இங்கே யாரும் நல்லா இருக்கமுடியாது, ஏன்னா இங்கே எல்லாமே தப்பாதான் நடக்குது...

பகையும், புகையும் சும்மாவிடாது

பசி தெரியாம வளத்தேன்னு நெனச்சேன், இப்படி பயம் தெரியாம வளர்ந்துருக்கியேடா...

இதுபோன்ற சில வசனங்கள் தான் முத்தையா படத்துலதான் இருக்கோம்ங்கிறத அப்பப்போ ஞாபகப்படுத்துது....

அழுத்தமான கதை இல்லாமை, எளிதில் கணிக்கக்கூடிய அடுத்தடுத்த காட்சிகள், அதிக வன்முறை காட்சிகள் படத்தின் பலவீனம்

சற்று ஆறுதலான விசயம் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை...

ரத்தம் தெறிக்கும் வன்முறைகாட்சிகளிலும் நிவாஸின் பிஜிஎம் சற்று இதம்.

மதுரை பளபளக்க, லேசா லேசா பாடல்கள் ஒன்ஸ்மோர் கேட்கலாம்...

போஸ் வெங்கட், விநோதினியின் நடிப்பு ஓகே...

இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை போற்றும் படம், ₹200 டி சர்ட், ₹400 ஜீன்ஸ் வசனம் படத்தின் புரோமோசனுக்கு வேணும்னா பயன்பட்டதே தவிர, படத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை...

அடித்துச்சொல்லலாம், இது எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் போற்றும் படம் அல்ல என்று

உறவு என்ற ஒன்றை கதைக்களமாக கொண்டு வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இயக்குனர்....

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பில் உள்ள

கடை + குட்டி என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு சிங்கத்தை அசிங்கப்படுத்தியுள்ள படம் தான் இது....

(யாரோ எதையோ பார்த்து சூடுபோட்டுக்கொண்டதை போல)

மொத்தத்தில்....

தேவராட்டம் - (ஒய் திஸ்) கொலைவெறி ஆட்டம்

Gautham Karthik Manjima Mohan Muthaiah

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: