தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இவர் நடித்த காதல் கோட்டை, சூர்ய வம்சம், ஃபிரண்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படங்கள் மட்டுமல்லாது சீரியல் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்பத்துடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தேவயானி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பேட்டியில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் தனது மகளுக்கு ஷாருக்கானுடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறினார். தேவயானி-ராஜகுமாரன் தம்பதியின் 2-வது மகள் பிரியங்கா. ராஜகுமாரன் கூறுகையில், பிரியங்கா நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று அவளுக்கு மிகுந்த ஆசை உள்ளது. இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து 8 கிலோ எடை குறைத்து இருக்கிறார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“