Prabhudheva-Tamannaah Starrer 'Devi 2' Full Movie Review: கடந்த 2016-ல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தேவி.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இந்தப் படத்தில் பிரபு தேவா, தமன்னா, சோனு சூத் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்த இயக்குநர், அதிலும் பிரபு தேவா, தமன்னாவையே முன்னணி கதாபாத்திரங்களாக டிக் செய்தார்.
இவர்களுடன் கோவை சரளா, நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், ஆர்.ஜே.பாலாஜியும் கமிட்டானார்கள். சிறப்புத் தோற்றத்தில் சோனு சூத் நடிக்கிறார்.
தேவி 2 படத்தை ஜி.வி ஃப்லிம்ஸ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது. முதல் பாகத்தில் தமன்னாவுக்கு பேய் பிடித்திருக்கும், ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் பிரபு தேவாவுக்கு பேய் பிடித்திருப்பது போல் மாற்றப்பட்டுள்ளதாம். அவரின் உடலில் அந்த பேய் செய்யும் அதகளத்தை காண ஆவலுடன் இருந்தார்கள் ரசிகர்கள். இன்று இப்படம் திரைக்கு வந்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.