Devi 2: இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தேவி 2 திரைப்படம் நேற்று வெளியானது.
2016-ம் ஆண்டு வெளியான தேவி படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகத்திலும் பிரபு தேவா, தமன்னா முதன்மை கதா பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் கோவை சரளா, நந்திதா ஸ்வேதா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஹாரர் காமெடி களத்தில் உருவாகியிருக்கும் தேவி 2 படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Light hearted family-fun entertainer Devi2 is now running in Theatres near you. #Sokkura Penne video song will be out today. #Devi2RunningSuccessfully
A @Screensceneoffl Release
Directed by Vijay @PDdancing @Tamannaahspeaks @Nanditasweta @SamCSMusic @tridentartsoffl pic.twitter.com/AaDEBhxTKL
— Trident Arts (@tridentartsoffl) 1 June 2019
இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சொக்குற பெண்ணே’ என்ற பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்பாடல் ரசிகர்களிடையே சிறப்பான ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.