/indian-express-tamil/media/media_files/2025/08/15/devi-sri-prasad-sachin-movie-composer-sharing-about-actor-vijay-singing-at-his-bed-room-tamil-news-2025-08-15-16-41-54.jpg)
'ஹே வாடி வாடி வாடி கைப்படாத சீடி' பாடல் உருவான விதம் குறித்த சுவாரசிய தகவலை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஒருமுறை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த 1984 ஆம் ஆண்டில் வெளியான 'வெற்றி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர், தனது 18-வது வயதில் 1992 ஆம் ஆண்டில் வெளியாகிய நாளைய தீர்ப்பு படத்தில் கதையின் நாயகனாக அறிமுக செய்தார். தொடர்ந்து பூவே உனக்காக (1996), லவ் டுடே (1997), காதலுக்கு மரியாதை (1997), துள்ளாத மனமும் துள்ளும் (1999) மற்றும் குஷி (2000) உள்ளிட்ட படங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
1998 ஆம் ஆண்டு காதலுக்கு மரியதை படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் கில்லி படத்தில் நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து திருப்பாச்சி (2005), சச்சின் (2005), சிவகாசி (2005) மற்றும் போக்கிரி (2007) ஆகிய படங்களில் நடித்து வெற்றிக் கொடியை நாட்டினர். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2010 களின் முற்பகுதியில் தொடங்கி அழகிய தமிழ் மகன் (2007), குருவி (2008), வேட்டைக்காரன் (2009), சுறா (2010), காவலன் (2011), வேலாயுதம் (2011), நண்பன் (2012), துப்பாக்கி (2012), கத்தி (2014), மெர்சல் (2017), சர்க்கார் (2018), மாஸ்டர் (2021), பீஸ்ட் (2022), லியோ (2023) உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. அவர் கடைசியாக நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (2024) கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தவிர, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் உச்ச நடிகர் என்கிற அந்தஸ்தையும் அவர் பெற்றார்.
விஜய் டாப் நடிகரான வலம் வந்து கொண்டிருக்கும் அதே வேளையில், அரசியலில் தடம் பாதிக்கப்போவதாக அறிவித்தார். பிப்ரவரி 2024-ல், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' படத்துடன் சினிமாவில் இருந்து விலகிவதாக தெரிவித்தார். இதனால், கடைசியாக விஜய்யை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய் பாட்டுப் பாட கூச்சப்பட்ட ஒரு பாடல் பின்னாளில் அது சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது. அந்தப் பாடல் தான் 'ஹே வாடி வாடி வாடி கைப்படாத சீடி'. இப்பாடல் 2005 ஆம் ஆண்டில் வெளியான சச்சின் படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். இசை தேவிஸ்ரீ பிரசாத் அமைத்திருந்தார்.
இந்த நிலையில், 'ஹே வாடி வாடி வாடி கைப்படாத சீடி' பாடல் உருவான விதம் குறித்த சுவாரசிய தகவலை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஒருமுறை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒரு பாடகராக எனக்கு விஜய் சார் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும். அவர் பாடுவதை நான் ரசித்துள்ளேன். இந்தப் பாடலை பாட அவர் கூச்சப்பட்டார். ஸ்டூடியோவில் வந்து பாடம் ரொம்பவே கூச்சப்பட்டார் என்று சொல்லலாம்.
அதனால், நான் சார் கூச்சப்படாதீங்க, நானெல்லாம் கூச்சப்பட்டதே கிடையாது என்று சொல்லிவிட்டு, நாங்களே உங்க வீட்டுக்கு வருகிறோம் என்று சொன்னேன். பிறகு, எனது சவுண்ட் இன்ஜினியருடன் லேப்டாப் மற்றும் சவுண்ட் கார்டு உடன் அவரின் வீட்டுக்கே சென்றோம். அப்போது அவர் இங்கே எப்படி ரெக்கார்டிங் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, நான் வீட்டை சுற்றி முற்றி பார்த்தேன்.
நான் தேடித் கொண்டிருப்பதை பார்த்து விட்டு, 'என்னாயா தேடுற?' என்று கேட்டார். நான் சொன்னேன், இல்ல சார் உங்க வீட்டில் அலமாரி போன்று ஏதாவது உள்ளதா? அப்ப தான் நீங்க பாடுவது எக்கோ அடிக்காது என்றேன். அந்த வீடு அப்போது தான் கட்டியது போல் இருந்தது. வீட்டில் எங்கு சென்றாலும் எங்களுக்கு எக்கோ அடித்தது. அப்போது ஒரு அலமாரியில் பெட்டை வைத்து மூடி விட்டு, அவரை உள்ளே செல்ல சொன்னோம். அப்போது அவர் 'இவன் என்ன பைத்தியம் மாதிரி செய்து கொண்டிருக்கிறான்' என்று சொன்னார்.
நாங்கள் அவரை உள்ளே போக சொல்லி விட்டு மைக் ஒன்றை மட்டும் வெளியில் இருந்து உள்ளே கொடுத்தோம். அவர் நாங்கள் சொன்ன அத்தனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு பாடினார். அந்த அலமாரியில் இருந்து பாடி, அந்த பெட் ரூமில் ரெக்கார்ட் செய்த பாடல் தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் 'ஹே வாடி வாடி வாடி கைப்படாத சீடி' பாடல்." என்று இசையமைப்பாளர் தேவிஸ்ரீ கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.