scorecardresearch

விமர்சனங்களை தாண்டி வெற்றியை பதிவு செய்த ஸ்ரீதேவி மகள்!

ஸ்ரீதேவி தனது மகள் தடாக் படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்று முதலிலே முடிவு செய்து வைத்திருந்தது

ஸ்ரீதேவி மகள்
ஸ்ரீதேவி மகள்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி அறிமுகமான தடாக் திரைப்படம், பல்வேறு விமர்சனங்களை கடந்து 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ‘தடாக்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஜான்வி கபூர் நடிப்பில் வெளியானா தடாக் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றாலும், விமர்சனம் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக படத்தில் ஜான்வியின் நடிப்பு ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பேசப்பட்டது.

விமர்சனத்தை சந்தித்த ஸ்ரீதேவி மகள்:

அதோடு ஜான்வி ஸ்ரீதேவி போல் திரையில்  மகள்:நடிக்கவில்லை என்றும் விமர்சனமும் எழுந்தது. இதுகுறித்து ஸ்ரீதேவி கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி ரசிகர்களிடம் ஒரு கோரிக்கை முன்வைத்தார். அதில் “ரசிகர்கள் அனைவரும் இது ஜான்விக்கு முதல் படம் என்பதை மறந்து விமர்சிக்க வேண்டாம். ஜான்வியின் நடிப்பை ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பேசுவது சரியாகாது.” என்று கூறியிருந்தார்.

ஜான்வி மகள்
ஜான்வி மகள்

இந்நிலையில் தடாக் திரைப்படம் 100 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வசூல் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கரன் ஜோகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,” “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்கா, இந்தியில் தடாக்படம் உருவானது. .
ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம் மராத்தியில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அங்கும் வசூல் சாதனை புரிந்தது.

நடிகை ஸ்ரீதேவி தனது மகள் தடாக் படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்று முதலிலே முடிவு செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dhadak crosses rs