ஸ்ரீதேவி மகள் ஜான்வி... திரையில் அம்மாவை போல் தெரிகிறாரா?

ஸ்ரீதேவி புருவம் தூக்கி பேசும் அழகு, ஜான்வியிடமும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்ப்பார்த்தன

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் முதன்முறையாக அறிமுகமாகி இருக்கும் ’தடாக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்த்த மக்களின் நினைவில் ஸ்ரீதேவி தெரிந்தாரா? இல்லையா? என்பது தான் பாலிவுட்டில் தற்சயம் அதிகம் பேசப்படும் பேச்சு.

தமிழில் மயிலு என்றால் ஸ்ரீதேவியை தவிர வேற யாருமே நம் நினைவில் வரமாட்டார்கள்.அந்த அளவிற்கு தனது அழகாலும், நடிப்பாலும், சிரிப்பாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. 2 மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த அவர், குளியலறையில் பிணமாக மீட்கப்பட்டார். இவரின் மரணம் குறித்த வதந்திகள் ஒருபக்கம் இருக்க இவரது மூத்த மகள் ஜான்வி குறித்து தான் தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

காரணம், ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு ஜான்வி இந்தியில் அறிமுகமாகும் ‘தடாக்’ படத்தின் ட்ரெயலர் நேற்றைய தினம் வெளியாகியது. மராத்தியில் ரிலீஸாகி ஹிட் அடித்த ‘சாய்ராட்’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் தான் ஜான்வி ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார். ஆவண கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் பெரும் பாராட்டுக்களை அளித்து குவித்திருந்தது.

இந்தியில் இந்த படத்தில் ஜான்வி நடிப்பது ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு தெரியும். ஆனால் தனது மகளின் முதல் படத்தை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது பெரும் சோகம் தான். இந்நிலையில் தான் திரையில் ஜான்வி ஸ்ரீதேவியை ஞாபகப்படுக்கிறாரா? என்ற ஆவல் ரசிகர்களிடம் இரட்டிபானது. ஆடல், பாடல், காதல், இசை, என கலகலப்பாக வெளிவந்திருக்கும் இந்த ட்ரெய்லர் இளைஞர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

குறிப்பாக ஸ்ரீதேவி புருவம் தூக்கி பேசும் அழகு, ஜான்வியிடமும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்ப்பார்த்தன. அதற்கான பதிலை நீங்களே ட்ரெய்லர் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

×Close
×Close