scorecardresearch

ரஜினி எப்படி தாங்குவார்? கலங்கித் தவிக்கும் ரசிகர்கள்

Dhanush – Aishwaryaa Rajinikanth head for divorce; Fans took to Twitter to express their dismay and shock Tamil News: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் கண் கலங்கி தவித்து வருகிறார்கள்.

Dhanush - Aishwaryaa divorce Tamil News: fans reaction in twitter

Actor Dhanush – Aishwaryaa Tamil News: தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது தனித்துவமான நடிப்பாற்றலால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். பிரபல டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த தம்பதிக்கு 2006-ல் முதல் மகன் யாத்ராவும், 2010-ல் இரண்டாவது மகன் லிங்காவும் பிறந்தனர்.

தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களை நடித்து குவித்து வரும் தனுஷ் தேசிய விருதையும் வசப்படுத்தியுள்ளார். அவர் இப்போது தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என பயணப்பட்டுள்ளார். அதேசமயம் ஐஸ்வர்யா, தமிழ் சினிமா தயாரிப்பு, திரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமித்து இருக்கிறார்.

இந்த நிலையில், தானும் ஜஸ்வர்யாவும் பிரிவதாக தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவும் அவ்வாறே பதிவு செய்துள்ளார்.

“நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்துகொள்ளும் நேரம் இது!

எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

இதேபோல் ஐஸ்வர்யாவும் தனது டிவிட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார். இருவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தம்பதியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மனமுடைந்தவர்களாக ட்விட்டரில் தங்களுக்கு பிடித்த தனுஷ்-ஐஸ்வர்யா தருணத்தை பகிர்ந்துள்ளனர்.

சில ரசிகர்கள் இந்த ஜோடியின் முடிவைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டனர். ஒரு ட்வீட்டில், “அன்புள்ள @SilambarasanTR_ ரசிகர்கள் @dhanushkraja குடும்ப பிரச்சனையில் தலையிட வேண்டாம் இது முற்றிலும் #தனுஷ் அண்ணா மற்றும் #ஐஸ்வர்யா மேம் பிரச்சினையில் தலையிட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம்”.

இது சூப்பர் ஸ்டாரை எப்படி பாதிக்கும் என்று ரஜினி ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “#ரஜினிகாந்த் ஒரு நேர்மறை மனிதர். நிறைய நேர்மறைகள். பல நேர்மறையான செயல்கள். இன்னும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல எதிர்மறைகள். கடவுள் ஏன் அவரை இப்படி தண்டிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் இப்போது அனுபவிக்கும் அதிர்ச்சியை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. . #தனுஷ் #ஐஸ்வர்யா பிரிவு” என்று பதிவிட்டுள்ளார்.

“எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, ​​நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்,” என்று நடிகர் தனுஷ் ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dhanush aishwaryaa divorce tamil news fans reaction in twitter