New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/31/nLAjWuMU5PFYNFqyOAFs.jpg)
'பெருமைக்குரிய பெற்றோர்கள்'... மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனது மூத்த மகன் யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ”பிரவுட் பேரண்ட்ஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'பெருமைக்குரிய பெற்றோர்கள்'... மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் ஜூன் 20 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், தனுஷின் மகன் யாத்ரா பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். அவரது பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு தனது மகனை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ”பிரவுட் பேரண்ட்ஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து நிலையில் தனது மகனுக்காக ஒன்றாக வந்து வாழ்த்தியது தொடர்பாக இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். பின்னர், நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தாலும், தங்களது மகன்களுக்கு என எப்போதும் ஒன்றாக உறுதுணையாக இருந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாத்ராவின் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து ஆனபோதும் இருவரும் ஒன்றாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.